ஜஸ்ப்ரித் பும்ரா இல்லாமல் தவித்து வரும் இந்திய அணிக்கு அவர் மட்டும் அணிக்கு திரும்பிவிட்டால் ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி கண்டிப்பாக உலகக் கோப்பையை வெல்லும் என்று முன்னாள் இந்திய வீரர் முகமது கைஃப் கூறியுள்ளார்.
உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் வரும் அக்டோபர் 5ஆம் தேதி தொடங்கி நவம்பர் 19 ஆம் தேதி வரையில் இந்தியாவில் நடக்கிறது. இதற்கான அட்டவணை அண்மையில் வெளியானது. கடந்த 2011 ஆம் ஆண்டு தோனி தலைமையிலான இந்திய அணி உலகக் கோப்பையை கைப்பற்றியது. அந்த தொடர் இந்தியாவில் தான் நடந்தது. இந்த தொடரும் இந்தியாவில் தான் நடக்கிறது.
ரோகித் சர்மா கேப்டன்ஷியில் அணியில் ஒற்றுமை இல்லை – சுனில் கவாஸ்கர்!
இந்த தொடரில் இந்திய அணி உலகக் கோப்பையை வெல்லும் என்று ரசிகர்கள் பலரும் ஆவலுடன் எதிர்பார்க்கின்றனர். ஆனால், அதற்கு பும்ரா வர வேண்டும். கேஎல் ராகுல், ஷ்ரேயாஸ் ஐயர், ஜஸ்ப்ரித் பும்ரா ஆகியோர் காயம் காரணமாக அறுவை சிகிச்சை செய்து கொண்டு ஓய்வில் இருந்த நிலையில், பெங்களூருவில் உள்ள தேசிய அகாடமியில் பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர்.
இந்தியா நடத்தும் உலகக் கோப்பை என்பதால், இந்தியா வெற்றி பெறுவதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளது. பும்ரா, ரிஷப் பண்ட் ஆகியோர் அணிக்கு திரும்பி விட்டால் கண்டிப்பாக இந்தியா தான் உலகக் கோப்பை தொடரை வெல்லும். இந்திய வீரர்கள் தங்களது உடல்நலனில் அதிக கவனம் செலுத்த வேண்டும். சீனியர் வீரர்கள் தங்களது பொறுப்பை உணர்ந்து விளையாடினால், இளம் வீரர்களும் அதனை பின்பற்றி அதிக ரன்கள் குவிக்க முடியும் என்று அவர் கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
வெஸ்ட் இண்டீஸ் எல்லாம் ஒன்னுமே இல்ல; ஜூஜூபி, வரலாறு சொல்லுது!