ரோகித் சர்மாவின் கேப்டன்ஷிப் மீது சுனில் கவாஸ்கர் அதிருப்தி தெரிவித்துள்ளார். அணி சிறப்பாக செயல்படாததற்கு அணியின் ஒற்றுமையின்மை தான் காரணம் என்று அவர் கூறியுள்ளார்.
ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி அடுத்தடுத்து முக்கியமான போட்டிகளில் விளையாட உள்ளது. அப்படியிருக்கும் போது ரவிச்சந்திரன் அஸ்வின், இனி நண்பர்கள் இல்லை, சக ஊழியர்களே என்று கூறியிருந்தார். இதனை கருத்தில் கொண்டு முன்னாள் இந்திய கேப்டனும், சிறந்த வீரருமான சுனில் கவாஸ்கர் தனது எண்ணங்களை எதிரொலித்துள்ளார். சக வீரர்களிடையே ஒற்றுமை இல்லாதது ஏமாற்றம் அளிப்பதாகவும், அணி சிறப்பாக செயல்படாததற்கு இது ஒரு முக்கிய காரணமாக இருக்கலாம் என்றும் கூறியுள்ளார்.
புஜாராவைப் போன்று பொறுமையாக விளையாடினால் வேலைக்கு ஆகாது; பிருத்வி ஷா!
அணியில் ஒற்றுமை இல்லை என்பது ஒரு சோகமான விஷயம் தான் ஏனென்றால் போட்டி முடிந்ததும் ஒவ்வொரு வீரரும் ஒன்றாக இருக்க வேண்டும், விளையாட்டைப் பற்றி பேசுகிறீகளோ இல்லையோ, இசை படங்கள் அல்லது நீங்கள் விரும்பும் ஏதாவது ஒன்றைப் பற்றி பேசலாம். ஆனால், அது நடக்கவில்லை என்றால் கண்டிப்பாக ஏமாற்றம் தான்.
கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு அல்லது அதற்கு மேல் தொடங்கிய புதிய விஷயம் என்னவென்றால், ஒவ்வொரு வீரருக்கும் ஒரு அறை உண்டு. வாழ்க்கையில் நடக்கும், நடந்த சாதாரண விஷயங்களைப் பற்றி பேசாமல் இருப்பது சக வீரர்களுக்கு இடையிலான ஒற்றுமையை குறைக்க வழி வகுத்திருக்கலாம்.
சுமார் 20 ஆண்டுகளுக்கு முன்பிலிருந்து வீரர்கள் தனித்தனி அறைகளில் வசிப்பதும் குழு மனப்பான்மை மற்றும் ஒற்றுமையின்மைக்கு ஒரு காரணமாக இருக்கலாம். சர்வதேச போட்டிகளில் இந்தியா மோசமாக விளையாடி வருகிறது. கடந்த ஆண்டு நடந்த ஆசிய கோப்பை போட்டியில் இந்தியா 4 இடங்களுக்குள் தோல்வி அடைந்தது. டி20 உலகக் கோப்பையில் அரையிறுதிப் போட்டியில் வெளியேறியது.
இந்தியா ஜெயிக்க அதிக வாய்ப்பு இருக்கிறது: முகமது கைஃப்!
இந்த ஆண்டு உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியாவிடம் தோல்வி அடைந்தது. இப்படி தொடர்ந்து அடுத்தடுத்த சர்வதேச போட்டிகளில் தோல்வி அடைந்து வரும் ரோகித் சர்மாவின் கேப்டன்ஷி குறித்து கேள்வி எழுந்து வருகிறது.
இருதரப்பு தொடர்களில் வெற்றி பெறும் இந்திய அணி சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் எல்லாம் தொடர்ந்து தடுமாறி வருகிறது. சொந்த மண்ணில் வெற்றி பெறுவதை விட, வெளிநாட்டில் நடக்கும் போட்டிகளில் வெற்றி பெறுவது தான் கடினம். இவ்வளவு ஏன், ஐபிஎல் போட்டிகளில் கூட, ஒரு கேப்டனாக 100க்கும் அதிகமான போட்டிகளில் விளையாடி, இளம் ஐபிஎல் வீரர்களை கொண்ட மும்பை இந்தியன்ஸ் அணியால் இறுதிப் போட்டிக்கு கூட வர முடியாமல் போனது தான் ஏமாற்றம் அளிக்கிறது என்று கூறியுள்ளார்.
வெஸ்ட் இண்டீஸ் எல்லாம் ஒன்னுமே இல்ல; ஜூஜூபி, வரலாறு சொல்லுது!