
டி20 உலக கோப்பை சூப்பர் 12 சுற்றில் இலங்கை மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான போட்டி ஷார்ஜாவில் நடந்துவருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி ஃபீல்டிங்கை தேர்வு செய்தது.
இதையடுத்து பேட்டிங் ஆட சவாலான ஷார்ஜா ஆடுகளத்தில் முதலில் பேட்டிங் ஆடிய வங்கதேச அணியின் தொடக்க வீரர் முகமது நைம் மற்றும் சீனியர் வீரர் முஷ்ஃபிகுர் ரஹீம் ஆகிய இருவரும் அபாரமாக ஆடி அரைசதம் அடித்தனர். வங்கதேச அணியின் தொடக்க வீரர் லிட்டன் தாஸ் 16 ரன்னில் ஆட்டமிழக்க, அவரைத்தொடர்ந்து சீனியர் வீரர் ஷகிப் அல் ஹசன் 10 ரன்னில் ஆட்டமிழந்தார்.
56 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்திருந்த வங்கதேச அணிக்கு, முகமது நைமும், முஷ்ஃபிகுர் ரஹீமும் இணைந்து பார்ட்னர்ஷிப் அமைத்து மிகச்சிறப்பாக பேட்டிங் ஆடி 3வது விக்கெட்டுக்கு 73 ரன்களை குவித்து கொடுத்தனர். அருமையாக பேட்டிங் ஆடி அரைசதம் அடித்த முகமது நைம், 52 பந்தில் 62 ரன்கள் அடித்து ஆட்டமிழந்தார்.
பொறுப்புடன் மிகச்சிறப்பாக ஆடி அரைசதம் அடித்த முஷ்ஃபிகுர் ரஹீம், கடைசிவரை களத்தில் நின்று கடைசி பந்தில் பவுண்டரி அடித்து சிறப்பாக முடித்து கொடுத்தார். பேட்டிங் ஆட சவாலான ஷார்ஜா ஆடுகளத்தில் ஸ்மார்ட்டாக பேட்டிங் ஆடி 37 பந்தில் 57 ரன்களை குவித்தார் முஷ்ஃபிகுர் ரஹீம்.
இதையும் படிங்க - #INDvsPAK ஜெயிக்கிறதுக்கு முன்னாடியே இந்தியாவின் அலப்பறை தாங்க முடியலயே.. அவசரப்படாதீங்க என அக்ரம் எச்சரிக்கை
முகமது நைம் மற்றும் முஷ்ஃபிகுர் ரஹீம் ஆகிய இருவரின் பொறுப்பான அரைசதத்தால் 20 ஓவரில் 171 ரன்களை குவித்த வங்கதேச அணி, 172 ரன்கள் என்ற கடின இலக்கை இலங்கைக்கு நிர்ணயித்துள்ளது. ஷார்ஜா ஆடுகளத்தில் இது கண்டிப்பாகவே கடினமான இலக்கு.