#IPL2021 ஆர்சிபி அணியின் தொடக்க ஜோடி இதுதான்..! ரசிகர்களுக்கு செம குட் நியூஸ் சொன்ன மைக் ஹெசன்

Published : Mar 25, 2021, 04:51 PM IST
#IPL2021 ஆர்சிபி அணியின் தொடக்க ஜோடி இதுதான்..! ரசிகர்களுக்கு செம குட் நியூஸ் சொன்ன மைக் ஹெசன்

சுருக்கம்

ஐபிஎல் 14வது சீசனில் ஆர்சிபி அணியின் தொடக்க வீரராக கோலி இறங்குவதை அந்த அணியின் தலைமை பயிற்சியாளர் மைக் ஹெசன் உறுதிப்படுத்தினார்.  

ஐபிஎல்லில் இதுவரை ஒருமுறை கூட கோப்பையை வென்றிராத ஆர்சிபி அணி, ஒவ்வொரு சீசனிலும் முதல் முறையாக கோப்பையை வெல்லும் முனைப்பில் களமிறங்கி ஏமாற்றத்துடனேயே ஒவ்வொரு சீசனையும் முடிக்கிறது.

14வது சீசன் வரும் ஏப்ரல் 9ம் தேதி தொடங்கவுள்ள நிலையில், அதற்கான திட்டமிடல்களை தொடங்கிவிட்டது ஆர்சிபி அணி. இந்நிலையில், ஆர்சிபி அணியின் தொடக்க வீரராக இந்த சீசனில் கோலியே இறங்குவார் என்பதை அந்த அணியின் கிரிக்கெட்டுக்கான இயக்குநர் மைக் ஹெசன் உறுதிப்படுத்தியுள்ளார்.

கடந்த சீசனில் இளம் வீரர் தேவ்தத் படிக்கல்லுடன் ஆஸி., சீனியர் வீரர் ஆரோன் ஃபின்ச் தொடக்க வீரராக இறங்கினார். ஆனால் அவர் சொதப்பியதையடுத்து, அணியிலிருந்து கழட்டிவிடப்பட்டார். விராட் கோலியே தொடக்க வீரராக இறங்கலாம். ஏனெனில் எப்படியும் கிட்டத்தட்ட ஆரம்ப ஓவர்களிலேயே கோலி களத்திற்கு வந்துவிடுவார். ஆனால் மிடில் ஆர்டர் சிக்கல் இருந்ததால், அவரால் தொடக்க வீரராக இறங்க முடியாமல் இருந்தது.

வாஷிங்டன் சுந்தரும் அண்மைக்காலமாக பேட்டிங்கில் நம்பிக்கையளிக்கும் நிலையில், ஆர்சிபி அணி அதிரடி மன்னன் க்ளென் மேக்ஸ்வெல்லையும் எடுத்துள்ளது. மேலும் சச்சின் பேபி, முகமது அசாருதீன் ஆகிய உள்நாட்டு திறமைகளையும் எடுத்துள்ளது ஆர்சிபி. எனவே மிடில் ஆர்டர் இம்முறை நம்பிக்கையளிக்கும் விதமாக உள்ளதால், தேவ்தத் படிக்கல்லுடன் கோலியே தொடக்க வீரராக இறங்கவுள்ளார்.

இந்த தகவலை மைக் ஹெசன் உறுதிப்படுத்தியுள்ளார். கோலியும் படிக்கல்லும் இணைந்து தொடங்குவதை பார்க்க ஆவலாக இருப்பதாக மைக் ஹெசன் தெரிவித்துள்ளார். கோலி தொடக்க வீரராக இறங்குவது உறுதியாகிவிட்டதால் ஆர்சிபி ரசிகர்கள் செம குஷியில் உள்ளனர்.
 

PREV
click me!

Recommended Stories

IPL 2026 Longest Six: சூர்யவன்ஷி சிக்ஸர் மழை பொழிந்தாலும் முதலிடத்தில் இல்லை! டாப் 5 சிக்ஸர்கள் அடித்த பேட்ஸ்மேன்கள்!
Vaibhav Suryavanshi: '700 ரன்கள் அடிப்பேன்னு முன்னாடியே எழுதி வச்சிருந்தேன்'.. ரகசியத்தை உடைத்த வைபவ் சூர்யவன்ஷி!