ராணுவத்திற்கு மரியாதை, புதிய ஸ்பான்சர்..! பிளாஸ்டிக்கை மறுசுழற்சி செய்து உருவாக்கப்பட்ட சிஎஸ்கே ஜெர்சி

By karthikeyan VFirst Published Mar 25, 2021, 4:13 PM IST
Highlights

சிஎஸ்கே அணியின் புதிய ஜெர்சியை கேப்டன் தோனி அறிமுகப்படுத்தினார்.
 

ஐபிஎல் 13வது சீசனில் முதல் முறையாக பிளே ஆஃபிற்கு முன்னேறாமல் லீக் சுற்றுடன் வெளியேறிய சிஎஸ்கே அணி, 14வது சீசனில் செம கம்பேக் கொடுத்து 4வது முறையாக கோப்பையை வெல்லும் முனைப்பில் முதல் அணியாக சென்னையில் பயிற்சியை தொடங்கியது.

தோனி, ராயுடு உள்ளிட்ட சிஎஸ்கே வீரர்கள் சென்னையில் பயிற்சியில் ஈடுபட்டுவரும் நிலையில், மார்ச் 26(நாளை) மும்பைக்கு புறப்பட்டு செல்கிறது. சிஎஸ்கே அணியின் முதல் போட்டி மும்பையில் நடைபெறுவதால் மும்பைக்கு செல்கிறது சிஎஸ்கே அணி.

இந்நிலையில், சிஎஸ்கே அணியின் புதிய ஜெர்சியை கேப்டன் தோனி வெளியிட்டார். சிஎஸ்கே அணியின் புதிய ஸ்பான்சரான "Myntra" பிராண்டின் சிம்பள் இடம்பெற்றுள்ளது. இந்த ஜெர்சியின் சிறப்பம்சம் என்னவென்றால், பிளாஸ்டிக்கை மறுசுழற்சி செய்து உருவாக்கப்பட்டுள்ளது. 15 பிளாஸ்டிக் பாட்டிலை மறுசுழற்சி செய்து ஒரு ஜெர்சி உருவாக்கப்பட்டுள்ளது.

 

ராணுவத்திற்கு மரியாதை செலுத்தும் விதமாக ஜெர்சியின் தோள்பகுதியில் ராணுவ உடை டிசைன் இடம்பெற்றுள்ளது. சிஎஸ்கே அணி 3 முறை கோப்பையை வென்றதை பறைசாற்றும் வகையில், 3 ஸ்டார்கள் இடம்பெற்றுள்ளன.
 

click me!