#INDvsENG 2வது ஒருநாள்: இந்திய அணியில் கட்டாய மாற்றம்.. உத்தேச ஆடும் லெவன்

Published : Mar 25, 2021, 02:57 PM IST
#INDvsENG 2வது ஒருநாள்: இந்திய அணியில் கட்டாய மாற்றம்.. உத்தேச ஆடும் லெவன்

சுருக்கம்

இங்கிலாந்துக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியில் களமிறங்கும் உத்தேச இந்திய அணியை பார்ப்போம்.  

இந்தியா - இங்கிலாந்து இடையேயான முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி 66 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்ற நிலையில், 2வது ஒருநாள் போட்டி நாளை(26ம் தேதி) புனேவில் நடக்கிறது.

2வது ஒருநாள் போட்டியில் இந்திய அணி ஆடும் லெவனில் ஒரேயொரு மாற்றத்துடன் களமிறங்கும். முதல் போட்டியில் ஃபீல்டிங் செய்யும்போது இடது தோள்பட்டையில் அடிபட்டு காயத்தால் இந்த தொடரிலிருந்து விலகிய ஷ்ரேயாஸ் ஐயருக்கு பதிலாக சூர்யகுமார் யாதவ் சேர்க்கப்படுவார். 

அந்த ஒரேயொரு மாற்றம் மட்டுமே இந்திய அணியில் செய்யப்படும். அதுவும் கட்டாயத்தின் பேரில் செய்யப்படும் மாற்றமே. அதைத்தவிர வேறு மாற்றம் ஏதும் செய்யப்பட வாய்ப்பில்லை. இந்திய அணியின் ஆடும் லெவன் காம்பினேஷன் நன்றாகவே இருக்கிறது. பேட்டிங் டெப்த் மற்றும் 6 பவுலிங் ஆப்சன் என அணி சிறப்பாக இருக்கிறது.

உத்தேச இந்திய அணி:

ரோஹித் சர்மா, ஷிகர் தவான், விராட் கோலி(கேப்டன்), சூர்யகுமார் யாதவ், கேஎல் ராகுல்(விக்கெட் கீப்பர்), ஹர்திக் பாண்டியா, க்ருணல் பாண்டியா, குல்தீப் யாதவ், ஷர்துல் தாகூர், புவனேஷ்வர் குமார், பிரசித் கிருஷ்ணா.
 

PREV
click me!

Recommended Stories

யார்க்கர் மன்னன் ஜஸ்பிரித் பும்ரா வரலாற்று சாதனை..! மற்ற பவுலர்கள் நினைச்சு கூட பார்க்க முடியாது!
IND VS SA 1st T20: தென்னாப்பிரிக்காவை வெறும் 74 ரன்னில் சுருட்டி வீசிய இந்தியா.. மெகா வெற்றி!