பயிற்சி முகாமை மும்பைக்கு மாற்றும் சிஎஸ்கே..! இதுதான் காரணம்

Published : Mar 24, 2021, 06:16 PM IST
பயிற்சி முகாமை மும்பைக்கு மாற்றும் சிஎஸ்கே..! இதுதான் காரணம்

சுருக்கம்

சிஎஸ்கே அணி வரும் 26ம் தேதி சென்னையிலிருந்து மும்பைக்கு செல்கிறது.  

ஐபிஎல் 13வது சீசனில் முதல் முறையாக பிளே ஆஃபிற்கு முன்னேறாமல் லீக் சுற்றிலேயே வெளியேறிய சிஎஸ்கே அணி, 14வது சீசனில் 4வது முறையாக கோப்பையை வெல்லும் தீவிரத்தில் உள்ளது. அதற்காக அனைத்து அணிகளுக்கும் முன்பாகவே பயிற்சியை தொடங்கியது சிஎஸ்கே அணி.

கேப்டன் தோனி, அம்பாதி ராயுடு, ரெய்னா, ஹரி நிஷாந்த் உள்ளிட்ட சிஎஸ்கே வீரர்கள் சென்னையில் தீவிர பயிற்சியில் ஈடுபட்டுவந்தனர். இந்நிலையில், வரும் 26ம் தேதி சிஎஸ்கே வீரர்கள் சென்னையிலிருந்து மும்பைக்கு செல்கின்றனர்.

ஐபிஎல் 14வது சீசன் வரும் ஏப்ரல் 9ம் தேதி தொடங்குகிறது. அகமதாபாத், சென்னை, மும்பை, பெங்களூரு, கொல்கத்தா, டெல்லி ஆகிய நகரங்களில் நடக்கின்றன. ஏப்ரல் 10ம் தேதி சிஎஸ்கே அணி அதன் முதல் போட்டியில் டெல்லி கேபிடள்ஸை எதிர்கொள்கிறது. அந்த போட்டி மும்பையில் நடக்கிறது.

சிஎஸ்கே அணி மும்பை, பெங்களூரு மற்றும் கொல்கத்தா ஆகிய நகரங்களில் ஆடுகின்றன. முதல் போட்டி ஏப்ரல் 10ம் தேதி நடக்கவுள்ளதால், வரும் 26ம் தேதி சிஎஸ்கே வீரர்கள் சென்னையிலிருந்து மும்பைக்கு செல்கின்றனர்.

அதன்பின்னர் மும்பையிலேயே பயிற்சியை தொடர்வார்கள். இந்த தகவலை சிஎஸ்கே அணியின் சி.இ.ஓ காசி விஸ்வநாதன் உறுதி செய்துள்ளார். 
 

PREV
click me!

Recommended Stories

தென்னாப்பிரிக்கா டி20 தொடரில் ஹர்திக் பாண்ட்யா படைக்க போகும் 'மெகா' இரட்டை சாதனை!
இந்திய அணி கேப்டன் கே.எல்.ராகுல், வீரர்களுக்கு அபராதம்.. ஐசிசி அதிரடி.. என்ன காரணம்?