பும்ராவா இருந்தா உட்கார வச்சுருப்பீங்களா? கண்டிப்பா கிடையாதுல.. அப்படினா ஆளாளுக்கு ஒரு நியாயமா? சேவாக் விளாசல்

By karthikeyan VFirst Published Mar 24, 2021, 5:10 PM IST
Highlights

இங்கிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் ரிஸ்ட் ஸ்பின்னர் யுஸ்வேந்திர சாஹலை அணியில் சேர்க்காததை கடுமையாக விளாசியுள்ளார் சேவாக்.
 

இந்தியா - இங்கிலாந்து இடையேயான முதல் ஒருநாள் போட்டியில், 317 ரன்கள் அடித்த இந்திய அணீ 251 ரன்களுக்கு இங்கிலாந்தை சுருட்டி 66 ரன் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

இந்த போட்டியில் இந்திய அணியில் 2 வீரர்கள் அறிமுகமானார்கள். க்ருணல் பாண்டியா மற்றும் பிரசித் கிருஷ்ணா ஆகிய இருவரும் அறிமுகமானார்கள். அறிமுக போட்டியிலேயே இருவரும் அபாரமாக ஆடி வரலாற்று சாதனை படைத்தார்கள்.

இந்த போட்டியில் இந்திய அணியின் ஸ்பின்னர்களாக குல்தீப் யாதவும் க்ருணல் பாண்டியாவும் ஆடினார்கள். இந்திய வெள்ளைப்பந்து கிரிக்கெட் அணியின் முதன்மை ஸ்பின்னராக பார்க்கப்பட்ட யுஸ்வேந்திர சாஹல் புறக்கணிக்கப்பட்டார். 

இங்கிலாந்துக்கு எதிரான முதல் 3 டி20 போட்டிகளில் 119 ரன்களை வாரிவழங்கிய சாஹல், கடைசி 2 டி20 போட்டிகளில் ஓரங்கட்டப்பட்டார். முதல் ஒருநாள் போட்டியிலும் சாஹலை ஓரங்கட்டிய நிலையில், இந்திய அணி நிர்வாகத்தின் இந்த முடிவை கடுமையாக விமர்சித்துள்ளார் சேவாக்.

இந்திய அணியின் பிரைம் ஸ்பின்னராக பார்க்கப்பட்ட சாஹலை ஓவர்நைட்டில் தூக்கியெறிந்ததை சேவாக் சாடியுள்ளார். இதுகுறித்து பேசியுள்ள சேவாக், பும்ரா சில போட்டிகளில் சரியாக ஆடவில்லை என்றால் உடனே அவரை அணியிலிருந்து நீக்கிவிடுவீர்களா? கண்டிப்பாக மாட்டீர்கள். அவர் நல்ல பவுலர். விரைவில் கம்பேக் கொடுப்பார் என்று சொல்வீர்கள் என்று வீரர்களை பொறுத்து அணி நிர்வாகத்தின் நிலைப்பாடு மாறுவதை சாடினார்.
 

click me!