அடுத்த தலைமுறை கிரிக்கெட்டர்களுக்கு ஹாரி ப்ரூக் தான் ரோல் மாடல்..! மைக்கேல் வான் புகழாரம்

Published : Feb 25, 2023, 10:23 PM IST
அடுத்த தலைமுறை கிரிக்கெட்டர்களுக்கு ஹாரி ப்ரூக் தான் ரோல் மாடல்..! மைக்கேல் வான் புகழாரம்

சுருக்கம்

அடுத்த 10 ஆண்டுகளில் ஹாரி ப்ரூக்கை போல் ஆடவேண்டும் என்று குழந்தை விரும்புவார்கள் என இங்கிலாந்து முன்னாள் கேப்டன் மைக்கேல் வான் கருத்து கூறியுள்ளார்.  

இங்கிலாந்து அணியின் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் ஹாரி ப்ரூக். கடந்த ஆண்டு செப்டம்பரில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக டெஸ்ட் கிரிக்கெட்டில் அறிமுகமான ஹாரி ப்ரூக்கிற்கு, நியூசிலாந்துக்கு எதிரான 2வது டெஸ்ட் அவரது 6வது டெஸ்ட் போட்டியாகும்.

அந்த டெஸ்ட்டின் முதல் இன்னிங்ஸில் 186 ரன்களை குவித்தார். 6வது டெஸ்ட்டில் ஆடும் ஹாரி ப்ரூக்கிற்கு இது 4வது சதமாகும். இந்த சதத்தை டி20 கிரிக்கெட்டில் ஆடுவதைப்போல் அதிரடியாக ஆடி அடித்தார். 176 பந்துகளில் 186 ரன்களை குவித்தார். 

ஆஸி., வீராங்கனை எலைஸ் பெர்ரியை பார்த்து கத்துக்கமா நீ..! ஹர்மன்ப்ரீத் கௌரை கடுமையாக விளாசிய முன்னாள் கேப்டன்

மேலும் இந்த சதத்தின் மூலம் வெறும் 9 இன்னிங்ஸ்களில் டெஸ்ட் கிரிக்கெட்டில் 100 என்ற சராசரியை எட்டி சாதனை படைத்துள்ளார் ஹாரி ப்ரூக். டெஸ்ட் கிரிக்கெட்டில் ஆல்டைம் பெஸ்ட் சராசரி, கிரிக்கெட் கடவுள் என்றழைக்கப்படும் டான் பிராட்மேனின் 99.94 என்பதுதான். அதை முந்தி 100.87* என்ற சராசரியுடன் முதலிடத்தில் உள்ளார் ஹாரி ப்ரூக். மேலும் டெஸ்ட் கிரிக்கெட்டில் முதல் 9 இன்னிங்ஸ்களில் அதிக ரன்களை குவித்த வீரர் என்ற வினோத் காம்ப்ளியின் (798 ரன்கள்) சாதனையை முறியடித்துள்ளார் ஹாரி ப்ரூக்.

24 வயதான ஹாரி ப்ரூக் அபாரமாக ஆடி ஸ்கோர் செய்துவருகிறார். இவர் இதே மாதிரி இன்னும் 10 ஆண்டுகளுக்கு ஆடினால் பல சாதனைகளை முறியடித்து மிகப்பெரிய பேட்ஸ்மேனாகிவிடுவார். 

மைக் டைசன் கூற்றை சுட்டிக்காட்டி ஆஸ்திரேலிய அணிக்கு பவர்ஃபுல் பன்ச் கொடுத்த கிரேக் சேப்பல்..!

ஹாரி ப்ரூக்கை பல முன்னாள் வீரர்களும் புகழ்ந்துவரும் நிலையில், இங்கிலாந்து முன்னாள் கேப்டன் மைக்கேல் வானும் புகழாரம் சூட்டியுள்ளார். ஹாரி ப்ரூக் குறித்து பேசிய மைக்கேல் வான், கடந்த 10 ஆண்டுகளில் அனைத்து குழந்தைகளும் ஜோ ரூட்டை போல் பேட்டிங் ஆட விரும்பினார்கள். அடுத்த 10 ஆண்டுகளில் குழந்தைகள் ஹாரி ப்ரூக்கை போல் பேட்டிங் ஆடவேண்டும் என்றுதான் விரும்புவார்கள் என்று ஹாரி ப்ரூக்கிற்கு புகழாரம் சூட்டியுள்ளார்.
 

PREV
click me!

Recommended Stories

இதுதான் bazball ஆட்டம்..! இங்கிலாந்துக்கு பாடம் கற்பித்த ஆஸ்திரேலியா! 3 பேர் அதிரடி அரை சதம்!
வார்த்தையை விட்ட விராட் கோலி..! பிசிசிஐ அதிருப்தியால் மனம் மாற்றம்..! நடந்தது என்ன?