#T20WorldCup அந்த அணி தான் ஃபேவரைட்ஸ்.. இந்தியாவை ஏன் ஃபேவரைட்ஸ்னு சொல்றாங்கனு புரியல - மைக்கேல் வான்

By karthikeyan VFirst Published Oct 20, 2021, 2:33 PM IST
Highlights

டி20 உலக கோப்பையின் ஃபேவரைட்ஸ் அணியாக இந்திய அணியை எப்படி மதிப்பிடுகிறார்கள் என்பதை தன்னால் புரிந்துகொள்ள முடியவில்லை என்று இங்கிலாந்து முன்னாள் கேப்டன் மைக்கேல் வான் தெரிவித்துள்ளார்.
 

டி20 உலக கோப்பை ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் ஓமனில் நடக்கிறது. கடந்த 17ம் தேதி முதல் தகுதிச்சுற்று போட்டிகள் நடந்துவருகின்றன. வரும் 23ம் தேதி முதல் சூப்பர் 12 சுற்று போட்டிகள் நடக்கவுள்ளன.

இந்த டி20  உலக கோப்பையை வெல்ல வாய்ப்புள்ள அணிகளாக இந்தியா, வெஸ்ட் இண்டீஸ், இங்கிலாந்து ஆகிய அணிகள் பார்க்கப்படுகின்றன. பாகிஸ்தான், நியூசிலாந்து அணிகளும் வலுவாக உள்ளன.

இந்நிலையில், டி20 உலக கோப்பையில் எந்த அணி கோப்பையை வெல்ல வாய்ப்புள்ளது என்பது குறித்து பேசிய இங்கிலாந்து முன்னாள் கேப்டன் மைக்கேல்  வான், என்னை பொறுத்தமட்டில் இங்கிலாந்து தான் ஃபேவரைட்ஸ். கடைசி சில தொடர்களில் மோசமாக ஆடிய இந்திய அணியை எப்படி ஃபேவரைட்ஸ் என்று சொல்கிறார்கள் என்பது புரியவில்லை.

இதையும் படிங்க - பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைவர் ரமீஸ் ராஜா செயல்பாட்டின் மீது வாசிம் அக்ரம் அதிருப்தி

வெஸ்ட் இண்டீஸ் மற்றும் பாகிஸ்தான் அணிகள் அபாயகரமான அணிகள். ஹை க்ளாஸ் வீரர்களை பெற்றிருக்கும் நியூசிலாந்து அணி, மிகச்சிறந்த வியூகங்களுடன் களமிறங்கும். ஆனால் ஆஸ்திரேலிய அணிக்கு டி20 உலக கோப்பையை வெல்ல வாய்ப்பிருப்பதாக நான் நினைக்கவில்லை. ஏனெனில் அவர்கள் டி20 கிரிக்கெட்டில் திணறிவருகிறார்கள். ஆஸி., அணியின் மேக்ஸ்வெல் மட்டுமே நன்றாக ஆடுகிறார் என்று மைக்கேல் வான் தெரிவித்தார்.
 

click me!