ரோஹித் ஒரு பேட்டிங் ஜீனியஸ்ங்க.. அவரு பக்கத்துல கூட யாராலயும் போக முடியாது.. ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் புகழாரம்

By karthikeyan VFirst Published Jul 9, 2019, 6:01 PM IST
Highlights

உலகின் தலைசிறந்த வீரராகவும் ஒருநாள் கிரிக்கெட்டின் நம்பர் 1 பேட்ஸ்மேனான விராட் கோலி, ரோஹித் சர்மா தான் தற்போதைய சூழலில் தலைசிறந்த ஒருநாள் பேட்ஸ்மேன் என்று புகழாரம் சூட்டியுள்ளார். 

உலக கோப்பை தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. அரையிறுதியில் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் ஆடிவருகின்றன. 

இந்த உலக கோப்பையில் ரோஹித் சர்மா செம ஃபார்மில் அபாரமாக ஆடிவருகிறார். லீக் சுற்றில் 8 இன்னிங்ஸ்களில் ஆடி 5 சதங்களுடன் 647 ரன்களை குவித்துள்ளார். தொடர்ச்சியாக சிறப்பாக ஆடிவருகிறார். ரோஹித் இருக்கும் ஃபார்முக்கு நாக் அவுட் போட்டிகளிலும் கண்டிப்பாக மிரட்டுவார் என்பதில் சந்தேகமில்லை. 

லீக் சுற்றில் தென்னாப்பிரிக்கா, பாகிஸ்தான், இங்கிலாந்து, வங்கதேசம் மற்றும் இலங்கை ஆகிய அணிகளுக்கு சதங்களை விளாசினார். இந்த உலக கோப்பையில் இதுவரை 5 சதங்களை விளாசியுள்ள ரோஹித் சர்மா, ஒரு உலக கோப்பையில் அதிக சதங்கள் அடித்த வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார். 

லீக் சுற்றில் 8 இன்னிங்ஸ்களில் ஆடி 647 ரன்களை குவித்துள்ளார். இன்னும் 27 ரன்கள் அடித்தால் ஒரு உலக கோப்பையில் அதிக ரன்கள் அடித்த வீரர் என்ற சச்சின் டெண்டுல்கர்(673 ரன்கள்) சாதனையை முறியடித்துவிடுவார். இன்று நியூசிலாந்துக்கு எதிராக நடந்துவரும் அரையிறுதி போட்டியிலேயே அந்த சாதனையை முறியடிக்க வாய்ப்புள்ளது. 

உலகின் தலைசிறந்த வீரராகவும் ஒருநாள் கிரிக்கெட்டின் நம்பர் 1 பேட்ஸ்மேனான விராட் கோலி, ரோஹித் சர்மா தான் தற்போதைய சூழலில் தலைசிறந்த ஒருநாள் பேட்ஸ்மேன் என்று புகழாரம் சூட்டியுள்ளார். முன்னாள் வீரர்கள் பலரும்  ரோஹித் சர்மாவின் பேட்டிங்கை பாராட்டியும் புகழ்ந்தும் வருகின்றனர். 

இந்நிலையில், ரோஹித் சர்மா குறித்து பேசிய ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் மைக்கேல் கிளார்க், தற்போதைய சூழலில் ரோஹித்தை வேறு எந்த பேட்ஸ்மேனாலும் நெருங்கக்கூட முடியாது. ரோஹித் வேறு லெவல் பேட்டிங்கை ஆடிவருகிறார். அவரை அவுட்டாக்குவதே ரொம்ப கஷ்டம். ரோஹித் ஒரு பேட்டிங் ஜீனியஸ். இந்த உலக கோப்பை தொடரின் நாயகனே ரோஹித் சர்மா தான் என்று தாறுமாறாக புகழ்ந்துள்ளார். 
 

click me!