அவரு பெரிய ஆளா வருவாருனு நான் 2007லயே சொல்லிட்டேன்.. 12 வருஷத்துக்கு முன்னாடியே கரெக்ட்டா கணித்த நம்ம கோலி

By karthikeyan VFirst Published Jul 9, 2019, 5:50 PM IST
Highlights

11 ஆண்டுகளுக்கு முன் 2008ம் ஆண்டு அண்டர் 19 உலக கோப்பை தொடரின் அரையிறுதி போட்டியிலும் விராட் கோலி தலைமையிலான இந்திய அணியும் வில்லியம்சன் தலைமையிலான நியூசிலாந்து அணியும் தான் மோதின.மீண்டும் சீனியர் உலக கோப்பையிலும் அதே இரண்டு கேப்டன்கள் தலைமையிலான அணிகள் மோதுவது, அவர்கள் இருவரின் திறமைகளை பறைசாற்றும் விதமாக அமைந்துள்ளது. சமகால கிரிக்கெட்டின் தலைசிறந்த வீரர்களாக இருவருமே திகழ்கின்றனர். 
 

உலக கோப்பை தொடரின் முதல் அரையிறுதி போட்டியில் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் ஆடிவருகின்றன. 

11 ஆண்டுகளுக்கு முன் 2008ம் ஆண்டு அண்டர் 19 உலக கோப்பை தொடரின் அரையிறுதி போட்டியிலும் விராட் கோலி தலைமையிலான இந்திய அணியும் வில்லியம்சன் தலைமையிலான நியூசிலாந்து அணியும் தான் மோதின.

மீண்டும் சீனியர் உலக கோப்பையிலும் அதே இரண்டு கேப்டன்கள் தலைமையிலான அணிகள் மோதுவது, அவர்கள் இருவரின் திறமைகளை பறைசாற்றும் விதமாக அமைந்துள்ளது. சமகால கிரிக்கெட்டின் தலைசிறந்த வீரர்களாக இருவருமே திகழ்கின்றனர். 

விராட் கோலி மற்றும் வில்லியம்சன் ஆகிய இருவரின் பேட்டிங் டெக்னிக்குமே அபாரம். அண்டர் 19 அணியில் ஆடியதிலிருந்தே இருவரும் அந்தந்த காலக்கட்டங்களில் அந்தந்த அணிகளில் சிறந்த வீரர்களாகவே இருந்துள்ளனர். தங்கள் நாட்டு அண்டர் 19 அணிகளுக்கு கேப்டன்களாக இருந்தவர்கள், இப்போது சீனியர் அணிக்கும் கேப்டன்களாக உள்ளனர்.

இந்நிலையில், நேற்று செய்தியாளர்களிடம் பேசிய விராட் கோலியிடம், வில்லியம்சன் எதிர்காலத்தில் சூப்பர் ஸ்டாராக திகழ்வார் என்று அண்டர் 19 அணியில் ஆடியபோது நீங்கள் நினைத்தீர்களா? என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். 

அதற்கு பதிலளித்த விராட் கோலி, கண்டிப்பாக நினைத்தேன். ஆனால் 2008 உலக கோப்பைக்கு முன்னதாகவே வில்லியம்சன் ஆட்டத்தை கண்டு வியந்திருக்கிறேன். 2007ல் நாங்கள் நியூசிலாந்து சென்று டெஸ்ட் தொடரில் ஆடினோம். அப்போது எங்கள் அணியின் ஃபாஸ்ட் பவுலர் ஒருவர் அதிவேகமாக வீசிய பந்து ஒன்றை அபாரமாக பேக்ஃபூட் ஷாட் ஒன்று ஆடினார். அப்போது ஸ்லிப்பில் நின்றிருந்த நான், எங்கள் அணியின் சக வீரரிடம், இப்படியொரு ஷாட்டை யாருமே ஆடி நான் பார்த்ததில்லை; இவர்(வில்லியம்சன்) மிகவும் ஸ்பெஷல் என்று கூறினேன் என்றார் கோலி. 
 

click me!