ஒருத்தர் கூட 50 இல்லை: ஐபிஎல் பிளே ஆஃபில் 182 ரன்கள் குவித்து சாதனை படைத்த மும்பை இந்தியன்ஸ்!

By Rsiva kumar  |  First Published May 24, 2023, 9:41 PM IST

லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணிக்கு எதிரான எலிமினேட்டர் போட்டியில் டாஸ் வென்று முதலில் ஆடிய மும்பை இந்தியன்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 182 ரன்கள் எடுத்துள்ளது.


மும்பை இந்தியன்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணிகளுக்கு இடையிலான எலிமினேட்டர் போட்டி சேப்பாக்கம் மைதானத்தில் நடந்து வருகிறது. இதில், டாஸ் வென்று முதலில் ஆடிய மும்பை இந்தியன்ஸ் அணியில் ரோகித் சர்மா 11 ரன்னில் ஆட்டமிழந்தார். இஷான் கிஷான் 15 ரன்களில் வெளியேற 4.2 ஓவர்களில் மும்பை அணி 2 விக்கெட் இழந்து 38 ரன்கள் எடுத்தது.

நடுவருடன் வாக்குவாதம்: தோனி மீது நடவடிக்கை எடுக்கப்பட்டால் இறுதிப்போட்டியில் விளையாட தடை?

Tap to resize

Latest Videos

அதன் பிறகு சூர்யகுமார் யாதவ் மற்றும் கேமரூன் க்ரீன் இருவரும் இணைந்து ரன்கள் சேர்த்தனர். ஒரு கட்டத்தில் 2 பவுண்டரி மற்றும் 2 சிக்ஸர்கள் உடன் 33 ரன்கள் எடுத்த சூர்யகுமார் யாதவ் ஆட்டமிழந்து வெளியேறியானார். இதே போன்று கேமரூன் க்ரீனும் 41 ரன்களில் ஆட்டமிழந்தார்.

பிசிசிஐயின் புதிய ஐடியா: ஒவ்வொரு டாட் பந்திற்கும் 500 மரங்கள் நட முடிவு!

இதையடுத்து வந்த திலக் வர்மா 23 ரன்கள் சேர்த்துக் கொடுத்தார். மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் வெளியேற கடைசியாக இம்பேக்ட் பிளேயராக வந்த நேஹல் வதேரா கடைசி ஓவரில் 2 பவுண்டரி, ஒரு சிக்ஸர் அடித்து கொடுக்க மும்பை இந்தியன்ஸ் அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்பிற்கு 182 ரன்கள் எடுத்துள்ளது. இதில் ஒருவர் கூட அரைசதம் அடிக்கவில்லை. அப்படி ஒரு வீரர் கூட 50 ரன்கள் எடுக்காமல் மும்பை இந்தியன்ஸ் அணி பிளே ஆஃப் போட்டியில் அதிகபட்சமாக 182 ரன்கள் எடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மும்பையா? லக்னோவா? வெளியேறப் போவது யார்? டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் பேட்டிங்!

பந்து வீச்சில் நவீன் உல் ஹாக் 4 ஓவர்கள் வீசி 38 ரன்கள் விட்டுக் கொடுத்து 4 விக்கெட்டுகள் கைப்பற்றினார். யாஷ் தாக்கூர் 4 ஓவர்களில் 34 ரன்கள் கொடுத்து 3 விக்கெட்டுகள் கைப்பற்றினார். மோசின் கான் ஒரு விக்கெட் கைப்பற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்த வருசம் ஹல்லா போல், கொஞ்சம் பலமா போல் - சிஎஸ்கேவுக்கு ஆதரவு கொடுத்த அஸ்வின்!

click me!