பிசிசிஐயின் புதிய ஐடியா: ஒவ்வொரு டாட் பந்திற்கும் 500 மரங்கள் நட முடிவு!

Published : May 24, 2023, 08:13 PM IST
பிசிசிஐயின் புதிய ஐடியா: ஒவ்வொரு டாட் பந்திற்கும் 500 மரங்கள் நட முடிவு!

சுருக்கம்

ஐபிஎல் பிளே ஆஃப் போட்டிகளில் வீசப்படும் ஒவ்வொரு டாட் பந்திற்கும் 500 மரங்கள் நட பிசிசிஐ முடிவு செய்துள்ளது.

பிரம்மாண்டமாக தொடங்கப்பட்ட ஐபிஎல் தொடரின் 16ஆவது சீசன் தற்போது இறுதி கட்டத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. இன்னும், 2 போட்டிகளில் 16ஆவது ஐபிஎல் சீசன் முடிவடைய உள்ளது. குஜராத் டைட்டன்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ், லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் ஆகிய 4 அணிகள் இந்த சீசனில் பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்றன.

மும்பையா? லக்னோவா? வெளியேறப் போவது யார்? டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் பேட்டிங்!

இந்த பிளே ஆஃப் சுற்றுகளில் நடக்கும் போட்டிகளின் மூலமாக பிசிசிஐ புதிய முயற்சி ஒன்றை மேற்கொண்டுள்ளது. அதாவது, இந்த 4 அணிகளும் விளையாடும் குவாலிஃபையர் 1, எலிமினேட்டர், குவாலிஃபையர் 2 மற்றும் இறுதிப் போட்டிகளில் வீசப்படும் ஒவ்வொரு டாட் பந்திற்கும் 500 மரங்களை நட திட்டமிட்டுள்ளது. இதனை குறிப்பிட்டு காட்டும் வகையில் ஸ்கோர்கார்டில் டாட் பந்துகளில் முதலில் மரம் எமோஜி காட்டப்படுகிறது.

அப்ஸ்டாக்கிற்கு தெரியுது, உங்களுக்கு தெரியவில்லை: ரவீந்திர ஜடேஜா வேதனை டுவீட் – எங்க அணிக்கு வாங்க!

 

 

அதன்படி, சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நேற்று முதல் குவாலிஃபையர் போட்டி நடந்தது. இதில் குஜராத் டைட்டன்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதின. இதில் முதலில் ஆடிய சிஎஸ்கே 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 172 ரன்கள் எடுத்தது. பின்னர் ஆடிய குஜராத் டைட்டன்ஸ் அணி 20 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 157 ரன்கள் மட்டுமே எடுத்து 15 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.

அடுத்த வருசம் ஹல்லா போல், கொஞ்சம் பலமா போல் - சிஎஸ்கேவுக்கு ஆதரவு கொடுத்த அஸ்வின்!

 

 

இந்தப் போட்டியில் வெற்றி பெற்றதன் மூலமாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 10ஆவது முறையாக இறுதிப் போட்டிக்கு சென்றுள்ளது. வரும் 28 ஆம் தேதி அகமதாபாத் மைதானத்தில் இறுதிப் போட்டி நடக்க இருக்கிறது. இந்த நிலையில் இந்தப் போட்டியில் முதல் மற்றும் 2ஆவது இன்னிங்ஸிலும் சேர்த்து மொத்தமாக 84 டாட் பந்துகள் வீசப்பட்டுள்ளது. அதன்படி பார்த்தால் முதல் குவாலிஃபையர் போட்டியின் மூலமாக பிசிசியை மொத்தமாக 42,000 மரங்களை நட உள்ளது. பிசிசிஐ மேற்கொண்டுள்ள இந்த புதிய முயற்சிக்கு பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

அடுத்த சீசனில் விளையாடலாமா? வேண்டாமா? டிசம்பரில் தான் முடிவு எடுப்பேன் – தோனி!

 

 

PREV
RK
About the Author

Rsiva kumar

நான் சிவக்குமார். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 7 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். சினிமா, கிரிக்கெட், ஜோதிடம், ஆன்மீகம் தொடர்பான செய்திகள் எழுதி வருகிறேன். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழ் இணையதளத்தில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறேன்.சிவக்குமார் எம்பிஏ படித்து முடித்துள்ளார். இவருக்கு டிஜிட்டல் மீடியாவில் 8 வருட பணி அனுபவம் உள்ளது. இப்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, விளையாட்டு, ஜோதிடம், ஆன்மிகம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். அதுதொடர்பான சிறப்பு செய்திகளை எழுதி வருகிறார்.Read More...
Read more Articles on
click me!

Recommended Stories

IND vs NZ 2வது ஓடிஐயில் ரோகித், விராட் கோலி சொதப்புவார்கள்.. ஆருடம் சொன்ன அதிரடி வீரர்!
Virat Kohli: ஜஸ்ட் 1 ரன்னில் சச்சினின் சாதனையுடன் போட்டிப்போடும் கோலி