துபாயில் நடந்த ஐஎல்டி20 லீக் தொடரின் இறுதிப் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் எமிரேட்ஸ் அணியானது 45 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று சாம்பியனாகியுள்ளது.
ஐபிஎல் டி20 தொடரைப் போன்று ஐஎல்டி20 லீக் எனப்படும் இண்டர்நேஷனல் லீக் டி20 தொடர் ஐக்கிய அரபு நாட்டில் நடந்தது. இதில் கல்ஃப் ஜெயிண்ட்ஸ், ஷார்ஜா வாரியர்ஸ், எம்.ஐ.எமிரேட்ஸ், துபாய் கேபிடல்ஸ், டெசர்ட் வைபெர்ஸ், அபு தாபி நைட் ரைடர்ஸ் என்று 6 அணிகள் இடம் பெற்று விளையாடின. இதில், எம்ஐ எமிரேட்ஸ், கல்ஃப் ஜெயிண்ட்ஸ், அபுதாபி நைட் ரைடர்ஸ், துபாய் கேபிடல்ஸ் என்று 4 அணிகள் மட்டுமே அரையிறுதிக்கு தகுதி பெற்றன.
இதில், எம்.ஐ.எமிரேட்ஸ் மற்றும் துபாய் கேபிடல்ஸ் ஆகிய இரு அணிகள் மட்டுமே இறுதிப் போட்டிக்கு முன்னேறின. நேற்று துபாயில் நடந்த இறுதி போட்டியில் டாஸ் வென்ற துபாய் கேபிடல்ஸ் அணி பவுலிங் தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த எம்.ஐ அணியானது நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்து 208 ரன்கள் குவித்தது. இதில், அதிகபட்சமாக கேப்டன் நிக்கோலஸ் பூரன் 57 ரன்கள் குவித்தார். ஆன்ட்ரே பிளெட்சர் 53 ரன்கள் எடுத்தார்.
பின்னர் 209 ரன்களை இலக்காக கொண்டு துபாய் கேபிடல் அணியானது பேட்டிங் செய்தது. இதில் தொடக்க வீரர் லூயிஸ் டு ப்ளூய் ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்தார். டாம் பாண்டன் 35 ரன்கள் சேர்த்தார். கேப்டன் சாம் பில்லிங்ஸ் அதிகபட்சமாக 40 ரன்கள் சேர்த்தார். மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்கவே துபாய் கேபிடல்ஸ் அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 163 ரன்கள் குவித்து 45 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.
IND vs ENG 3rd Test: இங்கிலாந்து டூர்: முதல் வீரராக 400 ரன்களை கடந்து யஷஸ்வி ஜெய்ஸ்வால் சாதனை!
இந்தப் போட்டியில் வெற்றி பெற்றதன் மூலமாக முதல் முறையாக ஐஎல்டி20 லீக் தொடரை முதல் முறையாக கைப்பற்றியது. இதற்கு முன்னதாக நடந்த கடந்த சீசனில் கல்ஃப் ஜெயிண்ட்ஸ் அணி வெற்றி பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த 2011 ஆம் ஆண்டு முதல் மும்பை இந்தியன்ஸ் அணியானது மொத்தமாக 10 டிராபிகளை கைப்பற்றியுள்ளது.
சிஎல்டி20 சாம்பியன் - 2011
ஐபிஎல் சாம்பியன் – 2013
சிஎல்டி20 சாம்பியன் - 2013
ஐபிஎல் சாம்பியன் – 2015
ஐபிஎல் சாம்பியன் – 2017
ஐபிஎல் சாம்பியன் – 2019
ஐபிஎல் சாம்பியன் – 2020
டபிள்யூபிஎல் சாம்பியன் – 2023
எம்.ஐ.என்.ஒய் – எம்.எல்.சி சாம்பியன் – 2023
எம்.ஐ.எமிரேட்ஸ் – ஐஎல்டி20 லீக் சாம்பியன் - 2024