BBL: பவுலிங், பேட்டிங் இரண்டிலும் அசத்தல்! அடிலெய்ட் அணியை தூசி போல ஊதித்தள்ளிய மெல்பர்ன் ஸ்டார்ஸ் அபார வெற்றி

By karthikeyan VFirst Published Jan 12, 2023, 5:11 PM IST
Highlights

பிக்பேஷ் லீக்கில் அடிலெய்ட் ஸ்டிரைக்கர்ஸுக்கு எதிரான போட்டியில் அபாரமாக ஆடி 9 விக்கெட் வித்தியாசத்தில் மெல்பர்ன் ஸ்டார்ஸ் அணி அபார வெற்றி பெற்றது.
 

பிக்பேஷ் டி20 லீக் தொடர் ஆஸ்திரேலியாவில் விறுவிறுப்பாக நடந்துவருகிறது. மெல்பர்னில் இன்று நடந்த போட்டியில் அடிலெய்ட் ஸ்டிரைக்கர்ஸுக்கு எதிராக டாஸ் வென்ற மெல்பர்ன் ஸ்டார்ஸ் அணி ஃபீல்டிங்கை தேர்வு செய்தது.

மெல்பர்ன் ஸ்டார்ஸ் அணி:

ஜோ கிளார்க் (விக்கெட் கீப்பர்), தாமஸ் ரோஜர்ஸ், ஹில்டன்  கார்ட்ரைட், பியூ வெப்ஸ்டர், நிக் லார்கின், ஜேம்ஸ் செய்மார், க்ளிண்ட் ஹின்ச்லிஃப், நேதன் குல்ட்டர்நைல், லுக் உட், லியாம் ஹாட்ச்சர் ஆடம் ஸாம்பா (கேப்டன்).

IND vs SL:குல்தீப் யாதவ், முகமது சிராஜிடம் சரணடைந்த இலங்கை! 2வது ஒருநாள் போட்டியில் இந்திய அணிக்கு எளிய இலக்கு

அடிலெய்ட் ஸ்டிரைக்கர்ஸ் அணி:

மேத்யூ ஷார்ட், ரியான் கிப்சன், கிறிஸ் லின், ஆடம் ஹோஸ், தாமஸ் கெல்லி, ஹாரி நீல்சன் (விக்கெட் கீப்பர்), பென் மானெண்டி, கேமரூன் பாய்ஸ், வெஸ் அகார், ஹென்ரி தார்ண்ட்டன், பீட்டர் சிடில் (கேப்டன்).

முதலில் பேட்டிங் ஆடிய அடிலெய்ட் ஸ்டிரைக்கர்ஸ் அணியின் விக்கெட் கீப்பர் ஹாரி நீல்சன் அதிகபட்சமாக 40 ரன்கள் அடித்தார். 33 பந்தில் 40 ரன்கள் அடித்தார் நீல்சன். அவரைத்தவிர மற்ற அனைத்து வீரர்களும் சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழந்ததால் அந்த அணி 19.2 ஓவரில் 108 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. ஆடம் ஹோஸ் 21 ரன்களும், மேத்யூ ஷார்ட் 20 ரன்களும் அடித்தனர். மெல்பர்ன் ஸ்டார்ஸ் அணியில் அபாரமாக பந்துவீசிய நேதன் குல்ட்டர்நைல் 4 ஓவரில் 17 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டையும் வீழ்த்தினார். ஆடம் ஸாம்பா மற்றும் ஹாட்ச்சர் ஆகிய இருவரும் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.

IND vs AUS: ஆஸி., டெஸ்ட் அணியில் 4 ஸ்பின்னர்கள்.. இந்தியாவை சமாளிக்க 4 ஆண்டுக்கு பிறகு இறக்கப்படும் வீரர்

109 ரன்கள் என்ற எளிய இலக்கை விரட்டிய மெல்பர்ன் ஸ்டார்ஸ் அணியின் தொடக்க வீரர்கள் தாமஸ் ரோஜர்ஸ் மற்றும் ஜோ கிளார்க் ஆகிய இருவரும் இணைந்து அதிரடியாக பேட்டிங் ஆடி முதல் விக்கெட்டுக்கு 9.3 ஓவரில் 77 ரன்களை சேர்த்தனர். ஜோ கிளார்க் 35 ரன்னில் ஆட்டமிழந்தார். சிறப்பாக ஆடி அரைசதம் அடித்த தாமஸ் ரோஜர்ஸ் அரைசதம் அடித்து 51 ரன்களுடன் கடைசிவரை களத்தில் நின்று போட்டியை முடித்து கொடுத்தார். 15வது ஓவரில் இலக்கை அடித்து 9 விக்கெட் வித்தியாசத்தில் எளிதாக அடிலெய்டை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது மெல்பர்ன் ஸ்டார்ஸ் அணி.
 

click me!