BBL: போல்ட், உட் அபார பவுலிங்.. அதிரடி வீரர்கள் நிறைந்த ரெனெகேட்ஸ் அணியை குறைவான ஸ்கோருக்கு சுருட்டிய ஸ்டார்ஸ்

By karthikeyan VFirst Published Jan 3, 2023, 3:46 PM IST
Highlights

பிக்பேஷ் லீக் தொடரில் மெல்பர்ன் ரெனெகேட்ஸ் அணியை  ரன்களுக்கு கட்டுப்படுத்திய மெல்பர்ன் ஸ்டார்ஸ் அணி, எளிய இலக்கை விரட்டுகிறது.
 

பிக்பேஷ் டி20 லீக் தொடர் ஆஸ்திரேலியாவில் விறுவிறுப்பாக நடந்துவருகிறது. இன்று மெல்பர்னில் நடந்துவரும் போட்டியில் மெல்பர்ன் ஸ்டார்ஸ் மற்றும் மெல்பர்ன் ரெனெகேட்ஸ் அணிகளுக்கு இடையேயான போட்டியில் டாஸ் வென்ற மெல்பர்ன் ஸ்டார்ஸ் அணி ஃபீல்டிங்கை தேர்வு செய்தது. 

மெல்பர்ன் ஸ்டார்ஸ் அணி:

ஜோ கிளார்க் (விக்கெட் கீப்பர்), தாமஸ் ரோஜர்ஸ், பியூ வெப்ஸ்டர், மார்கஸ் ஸ்டோய்னிஸ், ஹில்டன் கார்ட்ரைட், நிக் லார்கின், காம்ப்பெல் கெல்லாவே, நேதன் குல்ட்டர்நைல், லுக் உட், டிரெண்ட் போல்ட், ஆடம் ஸாம்பா (கேப்டன்).

IND vs SL:இந்த 11 பேரை இறக்கிவிடுங்க; வெற்றி நமக்குத்தான்! ஆகாஷ் சோப்ரா தேர்வுசெய்த இந்திய அணியின் ஆடும் லெவன்

மெல்பர்ன் ரெனெகேட்ஸ் அணி:

மார்டின் கப்டில், சாம் ஹார்பர் (விக்கெட் கீப்பர்), ஆரோன் ஃபின்ச் (கேப்டன்), ஷான் மார்ஷ், ஜோனாதன் வெல்ஸ், ஹார்வி, வில் சதர்லேண்ட், அகீல் ஹுசைன், டாம் ரோஜர்ஸ், கேன் ரிச்சர்ட்ஸன், முஜீபுர் ரஹ்மான்.

முதலில் பேட்டிங் ஆடிய மெல்பர்ன் ரெனெகேட்ஸ் அணியில் மார்டின் கப்டில், ஷான் மார்ஷ் மற்றும் ஹார்வி ஆகிய மூவரும் தலா 32 ரன்கள் அடித்தனர். கப்டில் 27 பந்தில் 32 ரன்களும், ஷான் மார்ஷ் 35 பந்தில் 32 ரன்களும், ஹார்வி 23 பந்தில் 32 ரன்களும் அடித்தனர். ஆரோன் ஃபின்ச் ஒரு ரன் மட்டுமே அடித்து ஏமாற்றமளித்தார். ஜோனாதன் வெல்ஸ் 24 ரன்கள் அடித்தார்.

கப்டில், ஃபின்ச், ஷான் மார்ஷ் ஆகிய அதிரடி வீரர்கள் இருந்தும் கூட, டிரெண்ட் போல்ட் மற்றும் லுக் உட்டின் அபாரமான பந்துவீச்சால் மெல்பர்ன் ரெனெகேட்ஸை 20 ஓவரில் 141 ரன்களுக்கு கட்டுப்படுத்தியது மெல்பர்ன் ஸ்டார்ஸ் அணி. 

மீண்டும் ஒரு சான்ஸ் தரோம்; இப்பவாவது உருப்படியா செயல்படுங்க! இந்திய அணியின் புதிய தேர்வுக்குழு தலைவர் இவர்தான்

மெல்பர்ன் ஸ்டார்ஸ் அணியின் டிரெண்ட் போல்ட் மற்றும் லுக் உட் ஆகிய இருவரும் தலா 3 விக்கெட் வீழ்த்தினர்.
 

click me!