சொந்த மண்ணில் இலங்கை அணிக்கு எதிராக சாதிக்குமா இந்தியாவின் இளம் படை?

By Rsiva kumarFirst Published Jan 3, 2023, 3:41 PM IST
Highlights

இலங்கை அணிக்கு எதிரான முதல் டி20 போட்டி மும்பையில் இன்று தொடங்கும் நிலையில், இதுவரையில் இந்திய அணி சொந்த மண்ணில் அதுவும் இலங்கைக்கு எதிரான டி20 தொடரில் தோற்றதே கிடையாது.

இந்தியா வந்துள்ள இலங்கை அணி 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரிலும், 3 ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரிலும் பங்கேற்கிறது. டி20 தொடருக்கான இந்திய அணிக்கு ஹர்திக் பாண்டியா கேப்டனாகவும், சூர்யகுமார் யாதவ் துணை கேப்டனாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர். டி20 தொடரில் விராட் கோலி, ரோகித் சர்மா, கே எல் ராகுல் ஆகியோருக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. இதே போன்று இலங்கை அணிக்கு எதிரான 3 ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடருக்கு ரோகித் சர்மா கேப்டனாகவும், ஹர்திக் பாண்டியா துணை கேப்டனாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

கடைசி விக்கெட்டுக்கு 105 ரன்கள்.. பாகிஸ்தானை வாட்டி வதைத்த மேட் ஹென்ரி - அஜாஸ் படேல்..! நியூசி., பெரிய ஸ்கோர்

ஒரு நாள் போட்டியில் ரோகித் சர்மா, கே எல் ராகுல் மற்றும் விராட் கோலி ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். ஆனால், டி20 தொடரிலும், ஒரு நாள் தொடரிலும் ரிஷப் பண்ட் மற்றும் ஷிகர் தவான் ஆகியோர் இடம் பெறவில்லை. இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான முதல் டி20 போட்டி மும்பை மைதானத்தில் இன்று இரவு 7 மணிக்கு நடக்கிறது. கடந்த 2022 ஆம் ஆண்டு இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட இலங்கை அணி 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரிலும், 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரிலும் பங்கேற்றது. இதில், 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரை இந்திய அணி 3-0 என்ற கணக்கில் கைப்பற்றியது. டெஸ்ட் தொடரையும் 2-0 என்று கைப்பற்றியது.

ரஞ்சி தொடர்: ஜெய்தேவ் உனாத்கத்திடம் மண்டியிட்டு சரணடைந்த டெல்லி அணி..! வெறும் 133 ரன்களுக்கு ஆல் அவுட்

இதே போன்று கடந்த 2020 ஆம் ஆண்டு இந்தியா வந்த இலங்கை அணி 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடியது. முதல் டி20 போட்டி டாஸ் போடாமலேயே ரத்து செய்யப்பட்டது. 2ஆவது மற்றும் 3ஆவது டி20 போட்டியில் இந்திய அணி வெற்றி வாகை சூடவே 2-0 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது. கடந்த 2017 ஆம் ஆண்டு இந்தியா வந்த இலங்கை அணி 3 டெஸ்ட் தொடரிலும் 3 ஒரு நாள் போட்டியிலும், 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரிலும் விளையாடியது.

IND vs SL:இந்த 11 பேரை இறக்கிவிடுங்க; வெற்றி நமக்குத்தான்! ஆகாஷ் சோப்ரா தேர்வுசெய்த இந்திய அணியின் ஆடும் லெவன்

இதில் டெஸ்ட் தொடரை 1-0 என்ற கணக்கில் கைப்பற்றிய இந்திய அணி ஒரு நாள் தொடரை 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது. கடைசியாக 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரை 3-0 என்ற கணக்கில் கைப்பற்றியது. கடந்த 2016 ஆம் ஆண்டு இந்தியா வந்த இலங்கை அணி 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றது. ஆனால், தொடரை 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது என்பது குறிப்பிடத்தக்கது. இதே போன்று கடந்த 2009 ஆம் ஆண்டு இந்தியா வந்த இலங்கை அணி 2 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றது. இதில், இரு அணிகளுமே ஒரு போட்டிகளில் வெற்றி பெறவே டி20 தொடர் டிராவில் முடிந்தது.

ஹர்திக் பாண்டியாவின் புத்தாண்டு தீர்மானம் என்ன தெரியுமா..? கேட்க நல்லாத்தான் இருக்கு.. ஆனால் நடக்குமா..?

இந்த நிலையில், சொந்த மண்ணில் இதுவரை நடந்த அனைத்து டி20 போட்டிகளிலும் இந்திய அணி தொடரை இழக்கவே இல்லை. அதே போன்று இந்த முறை நடக்கும் 3 டி20 போட்டிகளிலும் வெற்றி பெற்று இலங்கை அணியை ஒயிட் வாஷ் செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

click me!