ரஞ்சி தொடரில் டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் அபாரமாக பந்துவீசிய ஜெய்தேவ் உனாத்கத் 8 விக்கெட்டுகளை வீழ்த்தி டெல்லி அணியை 133 ரன்களுக்கு சுருட்டினார்.
ரஞ்சி தொடரில் சௌராஷ்டிரா - டெல்லி அணிகளுக்கு இடையேயான போட்டி ராஜ்கோட்டில் நடந்துவருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற டெல்லி அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.
டெல்லி அணி:
துருவ் ஷோரே, யஷ் துல் (கேப்டன்), ஜாண்டி சிந்து, ஆயுஷ் பதோனி, வைபவ் ராவல், லக்ஷய் தரேஜா (விக்கெட் கீப்பர்), லலித் யாதவ், ஷிவாங்க் வைஷிஷ்ட், பிரன்ஷு விஜய்ரன், ரித்திக் ஷோகீன், குல்திப் யாதவ்.
சௌராஷ்டிரா அணி:
ஜெய் கோஹில், ஹர்விக் தேசாய் (விக்கெட் கீப்பர்), சிராக் ஜானி, ஷெல்டான் ஜாக்சன், ஆர்பிட் வசவடா, சமர்த் வியாஸ், ப்ரெராக் மன்கத், பார்த் பட், தர்மேந்திரசின் ஜடேஜா, யுவராஜ்சின் தோடியா, ஜெய்தேவ் உனாத்கத்(கேப்டன்).
முதலில் பேட்டிங் ஆடிய டெல்லி அணியின் 3 விக்கெட்டுகளை முதல் ஓவரில் வீழ்த்தினார் ஜெய்தேவ் உனாத்கத். அதுவும் முதல் ஓவரில் ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்தி சாதனை படைத்தார். முதல் ஓவரிலேயே துருவ் ஷோரே(0), வைபவ் ராவல் (0), யஷ் துல்(0) ஆகிய மூவரையும் அடுத்தடுத்த பந்துகளில் வீழ்த்தி ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்தினார். இதன்மூலம் ரஞ்சி கிரிக்கெட் வரலாற்றில் முதல் ஓவரில் ஹாட்ரிக் வீழ்த்திய முதல் பவுலர் என்ற வரலாற்று சாதனையை படைத்துள்ளார் ஜெய்தேவ் உனாத்கத். ரஞ்சி தொடர் வரலாற்றில் முதல் ஓவரில் ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்திய முதல் பவுலர் என்ற வரலாற்று சாதனையை படைத்தார் உனாத்கத்.
இன்னிங்ஸின் 2வது ஓவரில் ஆயுஷ் பதோனியை (0) சிராக் ஜானி வீழ்த்தினார். இன்னிங்ஸின் 3வது ஓவரை தனது 2வது ஓவராக வீசிய ஜெய்தேவ் உனாத்கத், ஜாண்டி சிந்து(4), லலித் யாதவ்(0) ஆகிய இருவரையும் வீழ்த்தினார். தனது முதல் ஓவரில் 3 விக்கெட்டுகளை வீழ்த்தி உனாத்கத், 2வது ஒவரில் 2 விக்கெட் என தனது இரண்டே ஓவரில் டெல்லி அணியின் பாதி விக்கெட்டுகளை வீழ்த்திவிட்டார். லக்ஷய் தரேஜாவையும் ஒரு ரன்னுக்கு உனாத்கத் வீழ்த்த, டெல்லி அணி வெறும் 10 ரன்களுக்கு 7 விக்கெட்டுகளை இழந்துவிட்டது.
IND vs SL: ஸ்லெட்ஜிங்லாம் தேவையில்ல.. எங்கள் உடல்மொழியிலயே இலங்கையை மிரட்டிருவோம் - ஹர்திக் பாண்டியா
பிரன்ஷூ விஜய்ரன் 15 ரன்கள் அடித்தார். 33 ரன்களுக்கு 8 விக்கெட்டுகளை இழந்தது டெல்லி அணி. அதன்பின்னர் ரித்திக் ஷோகீனும் ஷிவாங்க் வஷிஷ்ட் ஆகிய இருவரும் இணைந்து சிறப்பாக பேட்டிங் ஆடி 9வது விக்கெட்டுக்கு 80 ரன்களை குவித்தனர். அபாரமாக ஆடி அரைசதம் அடித்த ஷோகீன் 68 ரன்களை குவித்து கடைசி வரை அவுட்டாகவில்லை. ஆனால் ஷிவாங்க் வஷிஷ்ட்டை 38 ரன்களுக்கு வீழ்த்திய ஜெய்தேவ் உனாத்கத், கடைசி விக்கெட்டையும் வீழ்த்த, 133 ரன்களுக்கு டெல்லி அணி ஆல் அவுட்டானது. அபாரமாக பந்துவீசிய உனாத்கத் 8 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.