IND vs SL:இந்த 11 பேரை இறக்கிவிடுங்க; வெற்றி நமக்குத்தான்! ஆகாஷ் சோப்ரா தேர்வுசெய்த இந்திய அணியின் ஆடும் லெவன்

By karthikeyan V  |  First Published Jan 3, 2023, 12:40 PM IST

இலங்கைக்கு எதிரான முதல் டி20 போட்டிக்கான இந்திய அணியின் ஆடும் லெவனை ஆகாஷ் சோப்ரா தேர்வு செய்துள்ளார்.
 


இலங்கை அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 3 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் ஆடுகிறது. முதலில் டி20 தொடர் நடக்கும் நிலையில், முதல் டி20 போட்டி இன்று மும்பை வான்கடேவில் நடக்கிறது.

டி20 தொடரில் கேப்டன் ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி, ராகுல் ஆகிய சீனியர் வீரர்கள் ஆடவில்லை. எனவே ஹர்திக் பாண்டியா கேப்டன்சியில் இளம் வீரர்களை கொண்ட அணி தான் டி20 தொடரில் ஆடுகிறது.

Tap to resize

Latest Videos

IND vs SL: ஸ்லெட்ஜிங்லாம் தேவையில்ல.. எங்கள் உடல்மொழியிலயே இலங்கையை மிரட்டிருவோம் - ஹர்திக் பாண்டியா

இந்த போட்டிக்கான ஆடும் லெவனை முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா தேர்வு செய்துள்ளார். தொடக்க வீரர்களாக ஷுப்மன் கில் மற்றும் இஷான் கிஷன் ஆகிய இருவரையும் தேர்வு செய்துள்ளார். இஷான் கிஷன் ஓபனிங்கில் இறங்குவது உறுதி. ருதுராஜ் - கில் ஆகிய இருவரில் யார் அவரது ஓபனிங் பார்ட்னர் என்ற கேள்வி உள்ளது. இந்நிலையில் ஷுப்மன் கில்லை தொடக்க வீரராக இறக்கலாம் என்று ஆகாஷ் சோப்ரா தெரிவித்துள்ளார்.

3ம் வரிசையில் சூர்யகுமார் யாதவ், 4ம் வரிசையில் சஞ்சு சாம்சன், 5ம் வரிசையில் கேப்டன் ஹர்திக் பாண்டியா, 6ம் வரிசையில் தீபக் ஹூடா ஆகியோரை சோப்ரா தேர்வு செய்துள்ளார். ஸ்பின்னர்களாக வாஷிங்டன் சுந்தர், அக்ஸர் படேல் மற்றும் யுஸ்வேந்திர சாஹல் ஆகிய மூவரையும் தேர்வு செய்துள்ளார். இவர்களில் வாஷிங்டன் சுந்தர், அக்ஸர் படேல் ஆகிய இருவரும் நன்றாக பேட்டிங்கும் ஆடக்கூடிய ஆல்ரவுண்டர்கள். ஹர்ஷல் படேல் மற்றும் அர்ஷ்தீப் சிங் ஆகிய இருவரை மட்டுமே ஃபாஸ்ட் பவுலர்களாக தேர்வு செய்துள்ளார். இவர்களுடன் கேப்டன் ஹர்திக் பாண்டியாவும் ஃபாஸ்ட் பவுலிங்கும் வீசுவார்.

மீண்டும் ஒரு சான்ஸ் தரோம்; இப்பவாவது உருப்படியா செயல்படுங்க! இந்திய அணியின் புதிய தேர்வுக்குழு தலைவர் இவர்தான்

ஆகாஷ் சோப்ரா தேர்வு செய்த இந்திய அணி:

ஷுப்மன் கில், இஷான் கிஷன் (விக்கெட் கீப்பர்), சூர்யகுமார் யாதவ், சஞ்சு சாம்சன், ஹர்திக் பாண்டியா (கேப்டன்), தீபக் ஹூடா, அக்ஸர் படேல், வாஷிங்டன் சுந்தர், ஹர்ஷல் படேல், யுஸ்வேந்திர சாஹல், அர்ஷ்தீப் சிங்.
 

click me!