அந்த பையனை சின்ன வயசுல இருந்து பார்க்குறேன்.. பாகிஸ்தானை அச்சுறுத்தப்போகும் இந்திய வீரர் அவர்தான் - ஹைடன்

Published : Oct 21, 2021, 10:11 PM IST
அந்த பையனை சின்ன வயசுல இருந்து பார்க்குறேன்.. பாகிஸ்தானை அச்சுறுத்தப்போகும் இந்திய வீரர் அவர்தான் - ஹைடன்

சுருக்கம்

பாகிஸ்தானை அச்சுறுத்தப்போகும் இந்திய வீரர் கேஎல் ராகுல் தான் என்று மேத்யூ ஹைடன் தெரிவித்துள்ளார்.  

டி20 உலக கோப்பையில் வரும் 24ம் தேதி, ஒட்டுமொத்த கிரிக்கெட் உலகத்தாலும் எதிர்பார்க்கப்படும் இந்தியா - பாகிஸ்தான் இடையேயான போட்டி நடக்கிறது. இந்தியா - பாகிஸ்தான் அணிகள் ஐசிசி தொடரில் மட்டுமே மோதுவதால் இந்த போட்டி மீது மிகுந்த எதிர்பார்ப்பு நிலவுகிறது.

இந்த போட்டி மீது மிகுந்த எதிர்பார்ப்பு நிலவும் நிலையில், பாகிஸ்தானுக்கு இந்திய அணி  தரப்பில் எந்த வீரர் பெரிய அச்சுறுத்தலாக இருப்பார் என்று மேத்யூ ஹைடன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து பேசியுள்ள மேத்யூ ஹைடன், கேஎல் ராகுல் தான் பாகிஸ்தானுக்கு பெரிய அச்சுறுத்தலாக இருப்பார். கேஎல் ராகுலை சிறுவயதிலிருந்து பார்த்துவருகிறேன். அவரது போராட்டங்கள் முதல் டி20 கிரிக்கெட்டில் அவர் ஆதிக்கம் செலுத்தியது வரை அவரை பார்த்துவருகிறேன். ரிஷப் பண்ட் அதிரடி வீரர். ஆட்டத்தின் மீதான அவரது பார்வையும், உலகின் பவுலிங் அட்டாக் அனைத்தையும் அடித்து நொறுக்குகிறார் என்று ஹைடன் தெரிவித்தார்.
 

PREV
click me!

Recommended Stories

TNPL: டிஎன்பிஎல் திரில்லர்: கடைசி வரை போராடிய திருச்சி... வெற்றியை தட்டிச்சென்ற மதுரை!
Ishan Kishan RBI Job: பேங்க் ஆபீஸரான இஷான் கிஷன்! மாச சம்பளம் எவ்வளவு தெரியுமா?