டி20 உலக கோப்பையில் இந்திய அணியின் மிகப்பெரிய பிரச்னை இதுமட்டும் தான்..! ஆகாஷ் சோப்ரா அதிரடி

By karthikeyan VFirst Published Oct 21, 2021, 9:31 PM IST
Highlights

டி20 உலக கோப்பையில் ஹர்திக் பாண்டியா பந்துவீசாதது தான் இந்திய அணியின் மிகப்பெரிய பிரச்னை என்று ஆகாஷ் சோப்ரா தெரிவித்துள்ளார்.
 

ஐக்கிய அரபு அமீரகத்தில் நடக்கும் டி20 உலக கோப்பையை தூக்கும் முனைப்பில் உள்ளது இந்திய அணி. விராட் கோலி தலைமையில் முதல் ஐசிசி டிராபியை வெல்ல வேண்டும் என்ற வேட்கையில் உள்ள இந்திய அணி, பயிற்சி  போட்டிகளில் இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலிய அணிகளை அசால்ட்டாக வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.

இந்திய அணியின் பேலன்ஸ் நன்றாக உள்ளது. ஹர்திக் பாண்டியா பந்துவீசுமளவிற்கு ஃபிட்னெஸுடன் இல்லாததால், 6 பேட்ஸ்மேன்கள் மற்றும் 5 பவுலர்களுடன் ஆட வேண்டிய நிலை இந்திய அணிக்கு ஏற்பட்டுள்ளது. அதனால் கூடுதல் பவுலிங் ஆப்சன் இல்லை. 

ரோஹித், ராகுல், கோலி, சூர்யகுமார், ரிஷப் பண்ட், ஹர்திக் பாண்டியா ஆகிய 6 பேரும் பேட்ஸ்மேன்கள். இவர்களில் ஹர்திக் பாண்டியா ஆல்ரவுண்டர். அவர் பவுலிங் வீசினால், 6வது பவுலிங் ஆப்சனாக இருந்திருப்பார். அவர் பந்துவீசமுடியாததால் வெறும் பேட்ஸ்மேனாக மட்டுமே ஆடுவதால் இந்திய அணி சரியாக 5 பவுலர்களுடன் ஆடவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

எனவே 6வது பவுலராக விராட் கோலி, ரோஹித், சூர்யகுமார் ஆகிய மூவரும் தயாராகிவருகின்றனர். இந்த தகவலை ஆஸி.,க்கு எதிரான பயிற்சி போட்டிக்கு முன்பாக ரோஹித் தெரிவித்தார். அந்த போட்டியில் கோலி 2 ஓவர்கள் நன்றாக வீசினார். எனவே 6வது பவுலிங் ஆப்சனாக கோலி, ரோஹித், சூர்யகுமார் ஆகிய மூவரில் ஒருவர் செயல்பட வேண்டியுள்ளது. ஹர்திக் பாண்டியா பந்துவீசாதது இந்திய அணிக்கு பெரிய பிரச்னை என்று ஆகாஷ் சோப்ரா கூறியுள்ளார்.

இதுகுறித்து பேசியுள்ள ஆகாஷ் சோப்ரா, ஹர்திக் பாண்டியா பந்துவீசாதது தான் இந்திய அணியின் பெரிய பிரச்னை. இந்திய அணி 5 பவுலர்களுடன் மட்டுமே ஆட வேண்டியுள்ளது. 6வது பவுலராக, 2016ம் ஆண்டை போல கோலியே பந்துவீச வேண்டியுள்ளது. இதுதான் இந்திய அணிக்கு பாதிப்பாக அமையவுள்ளது. ஹர்திக் பாண்டியா ஒருசில ஓவர்களை வீசினால் அது இந்திய அணிக்கு நல்லது. டி20 கிரிக்கெட்டில் கூடுதல் பவுலிங் ஆப்சன் தேவை என்று ஆகாஷ் சோப்ரா தெரிவித்தார்.
 

click me!