முக்கியமான போட்டியில் ஓமனை குறைவான ரன்களுக்கு சுருட்டிய ஸ்காட்லாந்து..!

Published : Oct 21, 2021, 09:24 PM IST
முக்கியமான போட்டியில் ஓமனை குறைவான ரன்களுக்கு சுருட்டிய ஸ்காட்லாந்து..!

சுருக்கம்

டி20 உலக கோப்பை தகுதிச்சுற்று போட்டியில் ஓமனை 122 ரன்களுக்கு சுருட்டியது ஸ்காட்லாந்து அணி.  

டி20 உலக கோப்பையில் சூப்பர் 12 சுற்றுக்கு தகுதிபெற வெற்றி பெற்றாக வேண்டிய கட்டாயத்தில் ஓமன் மற்றும் ஸ்காட்லாந்து அணிகள் இன்றைய போட்டியில் ஆடிவருகின்றன. இந்த போட்டியில் டாஸ் வென்ற ஓமன் அணி முதலில் பேட்டிங் ஆடியது.

ஓமன் அணியின் தொடக்க வீரர் ஆகிப் இலியாஸ் ஒருமுனையில் நன்றாக ஆட, மறுமுனையில் ஜதீந்தர் சிங்(0), காஷ்யப்(3) ஆகிய இருவரும் சொதப்பினர். சிறப்பாக ஆடிய இலியாஸும் 37 ரன்னில் ஆட்டமிழந்தார்.

அதன்பின்னர் முகமது நதீமும், கேப்டன் ஜீஷன் மக்சூத்தும் இணைந்து நன்றாக ஆடிய நிலையில், நதீம் 25 ரன்னில் ஆட்டமிழந்தார். அவரைத்தொடர்ந்து மக்சூத்தும் 34 ரன்னில் ஆட்டமிழக்க, அதன்பின்னர் வந்த வீரர்கள் அனைவருமே ஒற்றை இலக்கத்தில் சீரான இடைவெளியில் அடுத்தடுத்து வெளியேற, 20 ஓவரில் ஓமன் அணி, 122 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

123 ரன்கள் என்ற எளிய இலக்கை விரட்டுகிறது ஸ்காட்லாந்து அணி.
 

PREV
click me!

Recommended Stories

IPL Auction 2026: சிஎஸ்கே வாங்கிய வீரர்கள் யார்? யார்? CSK அணி வீரர்கள் முழு பட்டியல் இதோ!
IPL Auction 2026: விலை போன வீரர்கள் யார்? யார்? விலை போகாத வீரர்கள் யார்? யார்? முழு லிஸ்ட் இதோ!