IND vs NZ டி20 கிரிக்கெட்டில் கோலியின் செம ரெக்கார்டை தகர்க்கப்போகும் மார்டின் கப்டில்.! வெறும் 11 ரன்களே தேவை

Published : Nov 19, 2021, 05:25 PM IST
IND vs NZ டி20 கிரிக்கெட்டில் கோலியின் செம ரெக்கார்டை தகர்க்கப்போகும் மார்டின் கப்டில்.! வெறும் 11 ரன்களே தேவை

சுருக்கம்

சர்வதேச டி20 கிரிக்கெட்டில்  அதிக ரன்களை குவித்த வீரர் என்ற சாதனையை படைக்க மார்டின் கப்டிலுக்கு வெறும் 11 ரன்கள் மட்டுமே தேவை.  

இந்தியா - நியூசிலாந்து இடையேயான 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரின் முதல் போட்டியில் இந்திய அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 1-0 என தொடரில் முன்னிலை வகிக்கிறது. இன்று ராஞ்சியில் நடக்கும் 2வது டி20 போட்டியில் வெற்றி பெற்று தொடரை வெல்லும் முனைப்பில் இந்திய அணியும், இந்த போட்டியில் வென்று தொடரை வெல்லும் வாய்ப்பை தக்கவைக்கும் முனைப்பில் நியூசிலாந்தும் களம் காண்கின்றன.

இதையும் படிங்க - IND vs NZ இந்திய அணியின் பேட்டிங் ஆர்டரை மாற்றி இப்படி இறக்கி பாருங்க.. நம்ம பசங்க பட்டைய கிளப்பிருவானுங்க..! ராபின் உத்தப்பாவின் சூப்பர் பரிந்துரை

இந்த போட்டியில் நியூசிலாந்து டாப் ஆர்டர் பேட்ஸ்மேன் மார்டின் கப்டில் 11 ரன்கள் அடித்தால் விராட் கோலியின் டி20 சாதனையை தகர்த்து முதலிடம் பிடித்துவிடுவார்.

இந்தியாவுக்கு எதிரான முதல் டி20 போட்டியில் அதிரடியாக பேட்டிங் ஆடிய மார்டின் கப்டில், 42 பந்தில் 70 ரன்களை குவித்தார். ஆனாலும் அவரது அதிரடி பேட்டிங் நியூசிலாந்து அணியின் வெற்றிக்கு பயன்படாமல் போய்விட்டது. அந்த போட்டியில் நியூசிலாந்து அணி தோல்வியை தழுவியது.

இதையும் படிங்க - IND vs NZ 2வது டி20: இந்திய அணியில் ஒரு மாற்றம்..! அவருக்கு பதிலா இவங்க 2 பேரில் யார்..? உத்தேச ஆடும் லெவன்

மார்டின் கப்டில் 110 சர்வதேச டி20 போட்டிகளில் ஆடி 3217 ரன்களை குவித்துள்ளார். டி20 கிரிக்கெட்டில் 3227 ரன்களுடன் விராட் கோலி முதலிடத்தில் உள்ளார். எனவே மார்டின் கப்டில் இன்றைய போட்டியில் 11 ரன்கள் அடித்தால் கோலியின் சாதனையை தகர்த்து, சர்வதேச டி20 கிரிக்கெட்டில் அதிக ரன்களை குவித்த வீரர் என்ற அபார சாதனையை படைப்பார்.

இதையும் படிங்க - பெண்ணுக்கு ஆபாச மெசேஜ் அனுப்பி வசமா சிக்கியதால் ஆஸி., டெஸ்ட் அணியின் கேப்டன்சியிலிருந்து விலகினார் Tim Paine

இந்த பட்டியலில் 117 டி20 போட்டிகளில் 3086 ரன்களை குவித்துள்ள ரோஹித் சர்மா, 3ம் வரிசையில் உள்ளார்.
 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

IND vs NZ T20: பேட்டிங் ஸ்டைலை மாற்றுகிறாரா சூர்யகுமார்?.. அவரே சொன்ன அதிரடி பதில்!
IND VS NZ முதல் டி20.. ஷ்ரேயாஸ் ஐயர் இடத்துக்கு 'ஆப்பு' வைத்த இளம் வீரர்.. பிளேயிங் லெவன்!