IND vs NZ 2வது டி20: இந்திய அணியில் ஒரு மாற்றம்..! அவருக்கு பதிலா இவங்க 2 பேரில் யார்..? உத்தேச ஆடும் லெவன்

Published : Nov 19, 2021, 03:10 PM IST
IND vs NZ 2வது டி20: இந்திய அணியில் ஒரு மாற்றம்..! அவருக்கு பதிலா இவங்க 2 பேரில் யார்..? உத்தேச ஆடும் லெவன்

சுருக்கம்

இந்தியா - நியூசிலாந்து இடையேயான 2வது டி20 போட்டியில் களமிறங்கும் இரு அணிகளின் உத்தேச ஆடும் லெவனை பார்ப்போம்.  

இந்தியா - நியூசிலாந்து இடையேயான 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரின் முதல் போட்டியில் இந்திய அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 1-0 என டி20 தொடரில் முன்னிலை வகிக்கிறது.

2வது டி20 போட்டி ராஞ்சியில் இன்று நடக்கிறது. இந்த போட்டியில் வெற்றி பெற்றால் 2-0 என இந்திய அணி டி20 தொடரை வென்றுவிடும். ஆனால் டி20 தொடரை வெல்லும் வாய்ப்பை தக்கவைக்க இன்றைய போட்டியில் நியூசிலாந்து அணி வெற்றி பெற்றே தீர வேண்டிய கட்டாயத்தில் ஆடுகிறது.

இந்த போட்டியில் களமிறங்கும் இந்திய அணியில் ஒரு மாற்றம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. முகமது சிராஜுக்கு பதிலாக, ஆவேஷ் கான் - ஹர்ஷல் படேல் ஆகிய இருவரில் ஒருவர் சேர்க்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. முகமது சிராஜுக்கு முதல் டி20 போட்டியில் இடது கையில் அடிபட்டது. ஆனாலும் கடைசி ஓவரை அவர் தொடர்ந்து வீசினார். காயம் ஒரு காரணமாக இருந்தாலும், ஐபிஎல்லில் நன்றாக பந்துவீசி இந்திய அணியில் இடம்பிடித்த ஹர்ஷல் படேல், ஆவேஷ் கான் ஆகிய இருவரில் ஒருவருக்கு இந்திய அணியில் ஆட வாய்ப்பளிக்கும் விதமாக சிராஜ் உட்காரவைக்கப்பட்டு, அவர்கள் இருவரில் ஒருவர் சேர்க்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

உத்தேச இந்திய அணி:

ரோஹித் சர்மா (கேப்டன்), கேஎல் ராகுல், சூர்யகுமார் யாதவ், ஷ்ரேயாஸ் ஐயர், ரிஷப் பண்ட் (விக்கெட் கீப்பர்), வெங்கடேஷ் ஐயர், அக்ஸர் படேல், ரவிச்சந்திரன் அஷ்வின், தீபக் சாஹர், புவனேஷ்வர் குமார், ஆவேஷ் கான்/ஹர்ஷல் படேல்.

நியூசிலாந்து அணியில் ஸ்பின்னர் டாட் ஆஸ்டிலுக்கு பதிலாக இஷ் சோதி ஆட வாய்ப்புள்ளது.

உத்தேச நியூசிலாந்து அணி:

மார்டின் கப்டில், டேரைல் மிட்செல், மார்க் சாப்மேன், க்ளென் ஃபிலிப்ஸ், டிம் சேஃபெர்ட் (விக்கெட் கீப்பர்), ராச்சின் ரவீந்திரா, மிட்செல் சாண்ட்னெர், டிம் சௌதி (கேப்டன்), இஷ் சோதி, லாக்கி ஃபெர்குசன், டிரெண்ட் போல்ட்.
 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

Vaibhav Sooryavanshi: 'கன்னி' அரைசதத்தில் உலக சாதனை படைத்த வைபவ் சூர்யவன்ஷி! இந்தியா மாஸ் வெற்றி!
IND vs ZIM: 149 கி.மீ வேகம்.. கம்பேக் மேட்ச்சில் மரண மாஸ் காட்டிய மயங்க் யாதவ்.. வரலாற்று சாதனை!