டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு.. வங்கதேச வீரர் மஹ்முதுல்லா திடீர் முடிவு

By karthikeyan VFirst Published Jul 10, 2021, 4:19 PM IST
Highlights

ஜிம்பாப்வேவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் 150 ரன்கள் அடித்த வங்கதேச வீரர் மஹ்முதுல்லா, அந்த அபாரமான இன்னிங்ஸுக்கு பிறகு சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக முடிவெடுத்துள்ளார்.
 

வங்கதேச ஒருநாள் மற்றும் டி20 அணிகளில் 2007ம் ஆண்டு அறிமுகமான மஹ்மதுல்லா, 2009ம் ஆண்டு டெஸ்ட் கிரிக்கெட்டில் அறிமுகமானார்.

வங்கதேச அணிக்கு மிடில் ஆர்டரில் முக்கியமான வீரராக திகழ்ந்து, பல சிறந்த இன்னிங்ஸ்களின் மூலம் வெற்றியை தேடிக்கொடுத்திருக்கிறார் மஹ்முதுல்லா. வங்கதேச அணியின் கேப்டனாகவும் இருந்துள்ளார்.

அவர் ஜிம்பாப்வேவுக்கு எதிராக தற்போது ஆடிவரும் போட்டி, அவரது 50வது சர்வதேச டெஸ்ட் போட்டி. இந்த போட்டியின் முதல் இன்னிங்ஸில் அபாரமாக ஆடி 150 ரன்களை குவித்த மஹ்முதுல்லா, இந்த போட்டியுடன் ஓய்வுபெறுவதாக திடீரென அறிவித்துள்ளார். அவரது அறிவிப்பு வங்கதேச கிரிக்கெட் ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியாக அமைந்துள்ளது.

மஹ்முதுல்லா வங்கதேச அணிக்காக 50 டெஸ்ட் போட்டிகளில் ஆடி, 5 சதங்கள் மற்றும் 16 அரைசதங்களுடன் 2,764 ரன்களை குவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
 

click me!