திண்டுக்கல் டிராகன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் லைகா கோவை கிங்ஸ் அணி 20 ஓவர்களில் 206 ரன்கள் குவித்தது.
தமிழ்நாடு பிரீமியர் லீக் தற்போது விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இதில், இடம் பெற்றுள்ள ஒவ்வொரு அணியும் பிளே ஆஃப் சுற்றுக்காக கடுமையாக போராடி வருகின்றன. ஏற்கனவே 3 போட்டிகளில் விளையாடி 3 போட்டியிலும் வெற்றி பெற்ற திண்டுக்கல் டிராகன்ஸ் அணி புள்ளிப்பட்டியலில் நம்பர் ஒன் இடத்திலும், லைகா கோவை கிங்ஸ் 3 போட்டிகளில் 2ல் வெற்றி பெற்று 3ஆவது இடத்திலும் இருந்தது.
1983ல் உலகக் கோப்பை சாம்பியன்: 40ஆவது ஆண்டு வெற்றியை கொண்டாடும் முன்னாள் வீரர்கள்!
இதையடுத்து இரு அணிகளுக்கும் இடையிலான 16ஆவது போட்டி நடந்தது. இதில், டாஸ் வென்ற திண்டுக்கல் டிராகன்ஸ் அணியின் கேப்டன் பந்து வீசுவதாக அறிவித்தார். அதன்படி முதலில் ஆடிய லைகா கோவை கிங்ஸ் அணி முதலில் ஆடி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 206 ரன்கள் குவித்தது. இதில், சாய் சுதர்சன் அதிரடியாக ஆடி 41 பந்துகளில் 83 ரன்கள் குவித்தார். கடைசியாக வந்த முகிலேஷ் 34 ரன்கள் சேர்த்தார். இறுதியாக லைகா கோவை கிங்ஸ் அணி 20 ஓவர்களில் 206 ரன்கள் எடுத்தது.
ஐபிஎல் விளையாடினால் போதுமா? தேர்வுக் குழுவை விமர்சனம் செய்த வாசீம் ஜாஃபர்!
பந்து வீச்சு தரப்பில் சரவணக் குமார் 2 விக்கெட்டுகள் கைப்பற்றினார். ரவிச்சந்திரன் அஸ்வின், மதிவாணன் மற்றும் சுபோத் பதி ஆகியோர் தலா ஒரு விக்கெட்டுகள் கைப்பற்றினர்.