தமிழ்நாடு பிரீமியர் லீக் தொடரின் முதல் போட்டியில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணிக்கு எதிராக முதலில் பேட்டிங் செய்த லைகா கோவை கிங்ஸ் அணியானது 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 141 ரன்கள் எடுத்துள்ளது.
தம்ழிநாடு பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடரின் 8ஆவது சீசன் இன்று தொடங்கியது. இதில் முதல் போட்டியில் லைகா சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணியின் கேப்டன் பாபா அபாரஜித் பவுலிங் தேர்வு செய்தார். அதன்படி லைகா கோவை கிங்ஸ் முதலில் பேட்டிங் செய்தது. இதில், எஸ் சுஜய் மற்றும் ஜே சுரேஷ் குமார் இருவரும் தொடக்க வீரர்களாக களமிறங்கினர். இதில், சுரேஷ் குமார் 4 ரன்னில் ஆட்டமிழக்க, சுஜய் 6 ரன்களில் ஆட்டமிழந்தார். அதன் பிறகு வந்த கேப்டன் ஷாருக் கான் 8 ரன்களில் ரன் அவுட் செய்யப்பட்டார்.
ரோகித், ஷிவம் துபே, யஷஸ்வி மற்றும் சூர்யகுமார் யாதவ்விற்கு ரூ.11 கோடி அறிவித்த மகாராஷ்டிரா முதல்வர்!
இவரைத் தொடர்ந்து பாலசுப்பிரமணியம் சச்சின் மற்றும் முகிலேஷ் இருவரும் இணைந்து நிதானமாக விளையாடினர். இந்த ஜோடி 4ஆவது விக்கெட்டிற்கு 54 ரன்கள் சேர்த்தது. இதில் முகிலேஷ் 31 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதன் பிறகு ராம் அரவிந்த் களமிறங்கினார். ஆனால், அவர் 12 ரன்களில் ஆட்டமிழக்க, ஆதிக் ரஹ்மான் 3 ரன்களில் ஆட்டமிழந்தார்.
மகாராஷ்டிரா சட்டமன்றத்தில் எதிரொலித்த ரோகித் சர்மா குரல் – சிரிப்பலையால் மூழ்கிய Assembly!
கடைசி வரை விளையாடிய பாலசுப்பிரமணியம் சச்சின் 53 பந்துகளில் 8 பவுண்டரி உள்பட 63 ரன்கள் குவித்து கடைசி பந்தில் ஆட்டமிழந்தார். இறுதியாக லைகா கோவை கிங்ஸ் 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 141 ரன்கள் குவித்தது. பவுலிங்கைப் பொறுத்த வரையில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணியில் அபிஷேக் தன்வர் 4 விக்கெட்டுகளும், கணேசன் பெரியசாமி மற்றும் டெரில் பெர்ராரியோ தலா ஒரு விக்கெட்டுகள் கைப்பற்றினர்.
கணபதி பாப்பா மோரியா – மகாராஷ்டிரா முதல்வரை சந்தித்த ரோகித், ஷிவம் துபே, சூர்யகுமார் யாதவ்!
Abhishek Tanwar makes his CSG debut in style! 🔥
📺 Watch live on Star Sports 1, Star Sports 1 Tamil, and FanCode. pic.twitter.com/Jb8KwFUjyL