நெல்லை ராயல் கிங்ஸ் அணிக்கு எதிரான டிஎன்பிஎல் 2024 தொடரின் 11ஆவது போட்டியில் லைகா கோவை கிங்ஸ் 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.
தமிழ்நாடு பிரீமியர் லீக் 2024 தொடைரின் 8ஆவது சீசன் சேலத்தில் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. முதல் கட்ட லீக் போட்டிகள் சேலத்தில் நடைபெற்றது. இதையடுத்து தற்போது 2ஆம் கட்ட லீக் போட்டிகள் கோயம்புத்தூரில் நடைபெற்று வருகிறது. இதில், நேற்று நடைபெற்ற நெல்லை ராயல் கிங்ஸ் மற்றும் லைகா கோவை கிங்ஸ் அணிகளுக்கு இடையிலான 11ஆவது போட்டி நடைபெற்றது. இதில், டாஸ் வென்ற லைகா கோவை கிங்ஸ் அணியானது பவுலிங் தேர்வு செய்தது. அதன்படி நெல்லை ராயல் கிங்ஸ் அணியானது முதலில் பேட்டிங் செய்து 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 167 ரன்கள் எடுத்தது. இதில், கேப்டன் அருண் கார்த்திக் 47 ரன்கள் எடுத்தார். சோனு யாதவ் 43 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.
undefined
இதையடுத்து 168 ரன்களை வெற்றி இலக்காக கொண்டு லைகா கோவை கிங்ஸ் அணியானது பேட்டிங் செய்தது. இதில் தொடக்க வீரர்களாக சாய் சுதர்சன் மற்றும் ஜே சுரேஷ் குமார் இருவரும் தொடக்க வீரர்களாக களமிறங்கினர். சாய் சுதர்சன் 8 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். பின்னர் வந்த பாலசுப்பிரமணியம் சச்சின் மற்றும் சுரேஷ் குமார் இருவரும் அதிரடியாக விளையாடினர். இதில் பாலசுப்பிரமணியம் சச்சின் 48 பந்துகளில் 8 பவுண்டரி 3 சிக்ஸர் உள்பட 76 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். பின்னர் வந்த கேப்டன் ஷாருக் கான் 7 ரன்கள் எடுக்க, சுரேஷ் குமார் 63 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். இறுதியாக லைகா கோவை கிங்ஸ் 18.3 ஓவர்களில் ஒரு விக்கெட் இழந்து 172 ரன்கள் எடுத்து 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்த வெற்றியின் மூலமாக லைகா கோவை கிங்ஸ் விளையாடிய 3 போட்டியிலும் வெற்றி பெற்று புள்ளிப்பட்டியலில் நம்பர் 1 இடத்தில் உள்ளது. நெல்லை ராயல் கிங்ஸ் விளையாடிய 3 போட்டியில் 2ல் வெற்றி பெற்று புள்ளிப்பட்டியலில் 2ஆவது இடத்தில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.