நெல்லை ராயல் கிங்ஸ் அணிக்கு எதிரான டிஎன்பிஎல் இறுதிப் போட்டியில் லைகா கோவை கிங்ஸ் அணி 104 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று சாம்பியனாகியுள்ளது.
தமிழ்நாடு பிரீமியர் லீக்கின் 7ஆவது சீசனுக்கான இறுதிப் போட்டி திருநெல்வேலியில் உள்ள இந்தியன் சிமெண்ட் நிறுவன மைதானத்தில் இன்று நடந்தது. இதில் லைகா கோவை கிங்ஸ் மற்றும் நெல்லை ராயல் கிங்ஸ் அணியும் மோதின. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற லைகா கோவை கிங்ஸ் அணி முதலில் பேட்டிங் ஆடியது.
வேஷ்டி சட்டையில் வந்து லைகா கோவை கிங்ஸ் அணிக்கு ஆதரவு கொடுத்த அருண் விஜய்!
லைகா கோவை கிங்ஸ்:
எஸ் சுஜய், ஜே சுரேஷ் குமார் (விக்கெட் கீப்பர்), பி சச்சின், யு முகிலேஷ், ஷாருக்கான் (கேப்டன்), ராம் அரவிந்த், ஆதிக் யுஆர் ரஹ்மான், எம் முகமது, மணிமாறன் சித்தார்த், ஜதாவேத் சுப்பிரமணியன், வள்ளியப்பன் யுதீஸ்வரன்
நெல்லை ராயல் கிங்ஸ்:
அருண் கார்த்திக் (கேப்டன்), அஜிதேஷ் குருசுவாமி, நிதிஷ் ராஜகோபால், ரித்திக் ஈஸ்வரன் (விக்கெட் கீப்பர்), லக்ஷ்மேஷா சூர்யபிரகாஷ், சோனு யாதவ், என்.எஸ் ஹரிஷ், எம் பொய்யாமொழி, எஸ் மோகன் பிரசாத், சந்தீப் வாரியர், லக்ஷய் ஜெயின் எஸ்
அதன்படி, எஸ் சுஜய் மற்றும் சுரேஷ் குமார் இருவரும் தொடக்க வீரர்களாக களமிறங்கினர். எனினும், சுஜய் 7 ரன்களில் ஆட்டமிழந்து அதிர்ச்சி கொடுத்தார். அடுத்து வந்த சச்சினும் 12 ரன்களில் வெளியேறினார். அதன் பிறகு வந்த முகிலேஷ், சுரேஷ் குமாருடன் இணைந்து ரன் குவிப்பில் ஈடுபட்டனர். ஒரு கட்டத்தில் 31 ரன்னுக்கு 2 விக்கெட் இழந்திருந்த நிலையில், சுரேஷ் குமார் அதிரடியாக ஆடி ரன்கள் குவித்தார். அவர், 33 பந்துகளில் 3 சிக்ஸர்கள், 4 பவுண்டரிகள் உள்பட 57 ரன்களில் ஆட்டமிழந்தார்.
எனக்கு அது வேணாம், இது ஓகே; அடம் பிடித்த ரவீந்திர ஜடேஜா: வைரலாகும் வீடியோ!
இவரைத் தொடர்ந்து வந்த கேப்டன் ஷாருக்கானும் 7 ரன்களில் ஆட்டமிழந்தார். அதன் பிறகு தான் ஆதிக் உர் ரஹ்மான் களமிறங்கினார். அவர், 21 பந்துகளில் 8 பவுண்டரி, ஒரு சிக்ஸர் உள்பட 50 ரன்கள் சேர்த்து கடைசியாக ஆட்டமிழந்தார். இறுதியாக லைகா கோவை கிங்ஸ் அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 205 ரன்கள் குவித்தது.
இதையடுத்து கடின இலக்கை துரத்திய நெல்லை ராயல் கிங்ஸ் அணிக்கு தொடக்க வீரர் ஸ்ரீ நெரஞ்சன் டக் அவுட்டில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த அஜிதேஷ் குருசுவாமி 1 ரன்னிலும், தொடக்க வீரர் அருண் கார்த்திக் 27 ரன்னிலும், நிதிஷ் ராஜகோபால் 13 ரன்னிலும், ரித்திக் ஈஸ்வரன் 4 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். அடுத்து வந்த மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்கவே நெல்லை ராயல் கிங்ஸ் 15 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 101 ரன்கள் மட்டுமே எடுத்து 104 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்துள்ளது.
ட்ரீம் 11 ஜெர்சியுடன் டாப் பேட்ஸ்மேன்கள்: வைரலாகும் போட்டோஷூட் புகைப்படங்கள்!
இந்த வெற்றியின் மூலமாக தொடர்ந்து 2ஆவது முறையாக லைகா கோவை கிங்ஸ் அணி சாம்பியன் டைட்டில் வென்றுள்ளது. லைகாவைப் பொறுத்த வரையில் பந்து வீச்சில் ஜதாவேத் சுப்பிரமணியன் 4 ஓவர்களில் 21 ரன்கள் கொடுத்து 4 விக்கெட்டுகள் கைப்பற்றினார். கேப்டன் ஷாருக்கான் 3 விக்கெட்டும், கௌதம் தாமரைக் கண்ணன் மற்றும் மணிமாறன் சித்தார்த் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டும் கைப்பற்றினர்.
Kovai per'la, Cup'ah 🏆 Lyca Kovai Kings per'la eludhungoo!! 🥳🎉
2023 Whatta Season it has been! 🤩🌟
Enna Makkalae... ? 💥💪🏻 🏏 👑💙 pic.twitter.com/Z8EcNIqgyo
நெல்லை ராயல் கிங்ஸ் அணிக்கு எதிரான TNPL 2023 இறுதிப் போட்டியில் 104 ரன்கள் வித்தியாசத்தில் லைகா கோவை கிங்ஸ் அணி அபார வெற்றிபெற்றது. 🔥🔥✨
Congratulations team ❤️ pic.twitter.com/eJN7w7064p
முதல் முறையாக இறுதிப் போட்டிக்கு வந்த நெல்லை ராயல் கிங்ஸ் அணி இறுதிப் போட்டியில் தோல்வி அடைந்துள்ளது. இந்தப் போட்டியில் வெற்றி பெற்றதன் மூலமாக 2ஆவது முறையாக லைகா கோவை கிங்ஸ் டைட்டில் வென்றுள்ளது. இந்தப் போட்டியில் வெற்றி பெற்ற லைகா கிங்ஸ் அணிக்கு ரூ.1 கோடியும், 2ஆவது இடம் பிடித்த நெல்லை ராயல் கிங்ஸ் அணிக்கு ரூ.60 லட்சமும், அரையிறுதிக்கு வந்த 2 அணிகளுக்கு ரூ.40 லட்சமும், மற்ற அணிகளுக்கு ரூ.25 லட்சம் வீதம் பரிசுத் தொகை வழங்கப்படுகிறது.