ஐபிஎல் 16வது சீசனின் இன்றைய போட்டியில் ஆர்சிபிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணி ஃபீல்டிங்கை தேர்வு செய்தது.
ஐபிஎல் 16வது சீசன் விறுவிறுப்பாக நடந்துவரும் நிலையில், இன்றைய போட்டியில் ஆர்சிபி மற்றும் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணிகள் மோதுகின்றன. பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் நடக்கும் போட்டியில் டாஸ் வென்ற லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணி ஃபீல்டிங்கை தேர்வு செய்தது.
இந்த சீசனில் அபாரமாக ஆடிவரும் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணி 3 போட்டிகளில் 2 வெற்றிகளை பெற்றுள்ளது. அந்த அணி தொடர்ந்து வெற்றி ஆதிக்கத்தை செலுத்தும் முனைப்பில் இன்று களமிறங்கியுள்ளது. முதல் போட்டியில் மும்பை இந்தியன்ஸுக்கு எதிராக அபார வெற்றியை பெற்ற ஆர்சிபி அணி, அடுத்த போட்டியில் படுதோல்வி அடைந்த நிலையில், மீண்டும் வெற்றி முனைப்பில் களமிறங்கியுள்ளது.
இந்த போட்டிக்கான ஆர்சிபி அணியில் மைக்கேல் பிரேஸ்வெல் நீக்கப்பட்டு மஹிபால் லோம்ரார் சேர்க்கப்பட்டுள்ளார். ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் இருந்த மஹிபால் லோம்ராரை வாங்கிய ஆர்சிபி அணி, இந்த போட்டியில் அவர் ஆடுவதற்கு வாய்ப்பளித்துள்ளது. ரஜத் பட்டிதார் இந்த சீசனிலிருந்து விலகியதால் மஹிபால் 3ம் வரிசையில் ஆடுவார்.
லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணி:
கேஎல் ராகுல் (கேப்டன்), கைல் மேயர்ஸ், தீபக் ஹூடா, மார்கஸ் ஸ்டோய்னிஸ், க்ருணல் பாண்டியா, நிகோலஸ் பூரன் (விக்கெட் கீப்பர்), ஜெய்தேவ் உனாத்கத், அமித் மிஷ்ரா, ஆவேஷ் கான், மார்க் உட், ரவி பிஷ்னோய்.
ஆர்சிபி அணி:
விராட் கோலி, ஃபாஃப் டுப்ளெசிஸ் (கேப்டன்), மஹிபால் லோம்ரார், க்ளென் மேக்ஸ்வெல், ஷபாஸ் அகமது, தினேஷ் கார்த்திக் (விக்கெட் கீப்பர்), அனுஜ் ராவத், டேவிட் வில்லி, வைன் பார்னெல், ஹர்ஷல் படேல், முகமது சிராஜ்.