மாஸ் காட்டிய குயீண்டன் டி காக், நிக்கோலஸ் பூரன், குர்ணல் பாண்டியா – LSG 199 ரன்கள் குவிப்பு!

Published : Mar 30, 2024, 09:49 PM IST
மாஸ் காட்டிய குயீண்டன் டி காக், நிக்கோலஸ் பூரன், குர்ணல் பாண்டியா – LSG 199 ரன்கள் குவிப்பு!

சுருக்கம்

பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான ஐபிஎல் 11ஆவது லீக் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 199 ரன்கள் குவித்தது.

பஞ்சாப் கிங்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணிகளுக்கு இடையிலான ஐபிஎல் தொடரின் 11ஆவது லீக் போட்டி தற்போது லக்னோவில் நடைபெற்று வருகிறது. இதில், முதலில் டாஸ் வென்ற லக்னோ கேப்டன் நிக்கோலஸ் பூரன் பேட்டிங் தேர்வு செய்தார். அதன்படி லக்னோ அணியில் குயீண்டன் டி காக் மற்றும் கேஎல் ராகுல் இருவரும் தொடக்க வீரர்களாக களமிறங்கினர்.

இதில் கேஎல் ராகுல் 15 ரன்களில் ஆட்டமிழக்க அடுத்து வந்த தேவ்தத் படிக்கல் 9 ரன்களில் நடையை கட்டினார். இவரைத் தொடர்ந்து வந்த மார்கஸ் ஸ்டோய்னிஸ் 19 ரன்களில் ஆட்டமிழந்தார். அதன் பிறகு குயீண்டன் டி காக் மற்றும் நிக்கொலஸ் பூரன் இருவரும் இணைண்டு அதிரடியாக விளையாடினர். இதில், குயீண்டன் டி காக் 38 பந்துகளில் 5 பவுண்டரி, 2 சிக்ஸர் உள்பட 54 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

கேப்டன் பூரனும் 21 பந்துகளில் 3 பவுண்டரி, 3 சிக்ஸர் விளாசி 42 ரன்களில் ஆட்டமிழந்தார். ஆயுஷ் பதோனி 8 ரன்களிலும், ரவி பிஷ்னோய் 0 ரன்னிலும், மோசின் கான் 2 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். கடைசி வரை அதிரடியாக விளையாடிய குர்ணல் பாண்டியா 22 பந்துகளில் 4 பவுண்டரி, 2 சிக்ஸர் உள்பட 43 ரன்கள் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்துள்ளார்.

இறுதியாக லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியானது 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 199 ரன்களும் குவித்துள்ளது. பவுலிங்கைப் பொறுத்த வரையில் பஞ்சாப் கிங்ஸ் அணியில் சாம் கரண் 3 விக்கெட்டும், அர்ஷ்தீப் சிங் 2 விக்கெட்டும், கஜிஸோ ரபாடா, ராகுல் சாகர் தலா ஒரு விக்கெட்டும் கைப்பற்றினர்.

PREV
RK
About the Author

Rsiva kumar

நான் சிவக்குமார். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 7 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். சினிமா, கிரிக்கெட், ஜோதிடம், ஆன்மீகம் தொடர்பான செய்திகள் எழுதி வருகிறேன். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழ் இணையதளத்தில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறேன்.சிவக்குமார் எம்பிஏ படித்து முடித்துள்ளார். இவருக்கு டிஜிட்டல் மீடியாவில் 8 வருட பணி அனுபவம் உள்ளது. இப்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, விளையாட்டு, ஜோதிடம், ஆன்மிகம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். அதுதொடர்பான சிறப்பு செய்திகளை எழுதி வருகிறார்.Read More...
Read more Articles on
click me!

Recommended Stories

ஹர்திக் மரண அடி.. பும்ரா மேஜிக் பவுலிங்.. SA-வை கதறவிட்ட இந்தியா.. T20 தொடரை வென்று அசத்தல்!
அபிஷேக் சர்மா சாதனையை சல்லி சல்லியாக நொறுக்கிய ஹர்திக் பாண்ட்யா..! மின்னல் வேக அரை சதம்!