சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் தோல்வி அடைந்த நிலையில், மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா ஓய்விற்காக வீட்டிற்கு சென்றுள்ளார்.
ஐபிஎல் 2024 கிரிக்கெட் தொடரின் 17ஆவது சீசன் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதுவரையில் 10 லீக் போட்டிகள் முடிந்துள்ள நிலையில், மும்பை இந்தியன்ஸ் விளையாடிய 2 போட்டியிலும் தோல்வி அடைந்துள்ளது. இதில் அதிர்ச்சிகரமான செய்தி என்னவென்றால் ஹைதராபாத்தில் நடந்த சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியானது 31 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்துள்ளது. இந்தப் போட்டிக்கு முன்னதாக குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிராக 6 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இப்படி விளையாடிய 2 போட்டியிலும் மும்பை இந்தியன்ஸ் தோல்வி அடைந்த நிலையில், ஹர்திக் பாண்டியா மீது விமர்சனம் எழுந்தது. மேலும், பயிற்சியாளர், கேப்டன் இடையில் ஒற்றுமை இல்லை என்றும், ரோகித் சர்மா கேப்டன் பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டதிலிருந்து மும்பை இந்தியன்ஸ் அணியில் பல விமர்சனங்கள் எழுந்து வருகிறது.
இந்த நிலையில் தான் மும்பை இந்தியன்ஸ் அணியானது தனது 3 ஆவது போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை எதிர்கொள்கிறது. இந்தப் போட்டி வரும் ஏப்ரல் 1 ஆம் தேதி மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெறுகிறது. இந்தப் போட்டிக்கு முன்னதாக ஓய்வு எடுக்கலாம் என்று கருதி மும்பை வந்த ஹர்திக் பாண்டியா குடும்பத்துடன் ஓய்வு எடுத்துவிட்டு வரலாம் என்று தனது வீட்டிற்கு புறப்பட்டுச் சென்றுள்ளார்.
After reaching Mumbai, Hardik Pandya gone back home in his G-Wagon to meet his family. pic.twitter.com/ZeuBI2TBnj
— Rohan Gangta (@rohan_gangta)