கடைசி நேரத்தில் நடந்த தவறு - லக்னோ பிட்ச்சை உருவாக்கும் அதிகாரி நீக்கம்!

By Rsiva kumarFirst Published Jan 31, 2023, 5:30 PM IST
Highlights

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான 2ஆவது டி20 போட்டியில் நடந்த தவறு காரணமாக லக்னோ மைதானத்தை உருவாக்கும் அதிகாரி அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார்.
 

இந்தியாவுக்கு எதிரான 3 ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரை நியூசிலாந்து 0-3 என்ற கணக்கில் இழந்த நிலையில், தற்போது 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரை கைப்பற்றும் முயற்சியில் தீவிரமாக இறங்கியுள்ளது. ஏற்கனவே முதல் டி20 போட்டியை கைப்பற்றிய நியூசிலாந்து, 2 ஆவது டி20 போட்டியில் தோல்வி அடைந்துள்ளது. இதன் காரணமாக இரு அணிகளுக்கு இடையிலான 3 டி20 போட்டிகள் கொண்ட தொடர் 1-1 என்று சமநிலை பெற்றுள்ளது.

நீயா? நானா? சவாலில் இந்தியா - நியூசிலாந்து: பிட்ச் யாருக்கு சாதகம்?

இதையடுத்து, இரு அணிகளுக்கு இடையிலான 3ஆவது கடைசி டி20 போட்டி நாளை அகமதாபாத் மைதானத்தில் நடக்க இருக்கிறது. இதற்காக இரு அணி வீரர்களும் அகமதாபாத் வந்து பயிற்சியை தொடங்கியுள்ளனர். இந்த நிலையில், கடந்த போட்டியில் நியூசிலாந்து அணி 99 ரன்களில் சுருண்டதும், இந்தியா 101 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றதும் குறிப்பிடத்தக்கது.

ஆசிய யூத் சாம்பியன்ஷிப் செஸ் போட்டி: இந்தியாவையே பெருமைப்படுத்திய செஸ் சாம்பியன் யுஸ்வேந்திர சகால்!

இது குறித்து பேசிய இந்திய கேப்டன் ஹர்திக் பாண்டியா கூறியிருப்பதாவது: இந்த மைதானம் டி20 போட்டிக்கு உருவாக்கப்படுவதே கிடையாது. கடினமான மைதானமாக இருந்தாலும் சரி, எளிதான மைதானமாக இருந்தாலும் விளையாடுவது எனக்கு பிரச்சனை இல்லை. ஆனால், மைதானத்தை உருவாக்குபவர்கள் தவறு செய்துவிட்டனர். அவர்கள் மைதானத்தை முன் கூட்டியே தயார் செய்திருக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.

ஆண்டவா... ஆஸ்திரேலிய தொடரில் சதமா அடிக்கணும்..! ரிஷிகேஷில் மனைவி அனுஷ்கா சர்மாவுடன் விராட் கோலி சாமி தரிசனம்

இந்த நிலையில், இந்த விவகாரம் குறித்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. லக்னோ மைதானத்தில் கருப்பு மண் இருந்துள்ளது. இது வேகப்பந்து வீச்சுக்கு சாதகமாக இருக்கும். ஆனால், போட்டி நடப்பதற்கு 3 நாட்களுக்கு முன்னர், மைதானம் வடிவமைப்பாளரை அழைத்த இந்திய அணி நிர்வாகம், மைதானத்தை ஸ்பின்னர்களுக்கு சாதகமாக இருக்கும்படி சிவப்பு மண் மைதானத்தை உருவாக்குமாறு கேட்டுள்ளனர்.

அதன்படியே சிவப்பு நிற மண் கொண்டு மைதானம் சுழற்பந்து வீச்சுக்கு சாதகமாக இருக்கும் வகையில் மாற்றியுள்ளனர். இது தற்போது சர்ச்சையானதைத் தொடர்ந்து மைதானம் உருவாக்கும் அதிகாரியை பிசிசிஐ அதிரடியாக பணி நீக்கம் செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இதையடுத்து, இரு அணிகளுக்கு இடையிலான 3ஆவது மற்றும் கடைசி டி20 போட்டி நாளை நடக்க உள்ள நிலையில், மைதானம் எப்படி இருக்குமோ என்று பலரும் கேள்வி எழுப்பத் தொடங்கிவிட்டனர்.

click me!