IND vs NZ: அந்த பையன் டி20 வீரர் இல்ல.. அவரை தூக்கிட்டு பிரித்வி ஷாவை இறக்குங்க.! பாக்., முன்னாள் வீரர் அதிரடி

By karthikeyan VFirst Published Jan 31, 2023, 4:39 PM IST
Highlights

நியூசிலாந்துக்கு எதிரான கடைசி டி20 போட்டியில் ஷுப்மன் கில்லுக்கு பதிலாக பிரித்வி ஷாவை தொடக்க வீரராக இறக்கவேண்டும் என்று பாகிஸ்தான் முன்னாள் வீரர் டேனிஷ் கனேரியா கருத்து கூறியுள்ளார்.
 

இந்தியா - நியூசிலாந்து இடையேயான 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் 2 போட்டிகள் நடந்துள்ள நிலையில், இரு அணிகளும் தலா ஒரு வெற்றியை பெற்றதால் 1-1 என தொடர் சமனில் உள்ளது. தொடரின் முடிவை தீர்மானிக்கும் கடைசி டி20 போட்டி நாளை(பிப்ரவரி 1) அகமதாபாத்தில் நடக்கிறது.

தொடரின் முடிவை தீர்மானிக்கும் கடைசி டி20 போட்டியில் ஷுப்மன் கில்லுக்கு பதிலாக பிரித்வி ஷா தொடக்க வீரராக இறக்கப்பட வேண்டும் என்று டேனிஷ் கனேரியா வலியுறுத்தியுள்ளார்.

நீ ஒண்ணும் உம்ரான் மாலிக்கோ, முகமது சிராஜோ இல்ல.. அதனால் இதையாவது செய்..! அர்ஷ்தீப் சிங்கிற்கு கம்பீர் அறிவுரை

டி20 கிரிக்கெட்டில் ஷுப்மன் கில்லின் ஸ்டிரைக் ரேட் எப்போதுமே விமர்சனத்துக்குள்ளாகியுள்ளது. ஐபிஎல்லில் 74 போட்டிகளில் ஆடியுள்ள கில்லின் ஸ்டிரைக் ரேட் வெறும் 125 மட்டுமே. ஒரு தொடக்க வீரராக அவரது ஸ்டிரைக் ரேட் மிகக்குறைவு. சர்வதேச டி20 கிரிக்கெட்டில் அவரது ஸ்டிரைக் ரேட் 128.81 ஆகும். 

ஆனால் ஒருநாள் கிரிக்கெட்டில் அண்மையில் அபாரமாக ஆடி இரட்டை சதமடித்ததுடன், கில் அருமையான ஃபார்மிலும் இருப்பதால் அவரை புறக்கணிக்க முடியாமல் நியூசிலாந்துக்கு எதிரான டி20 தொடரிலும் அவரே தொடக்க வீரராக இறக்கப்பட்டார். ஆனால் அந்த வாய்ப்பை அவர் பயன்படுத்திக்கொள்ளவில்லை. ஒருநாள் போட்டிகளில் ஜொலிக்குமளவிற்கு கில் டி20 கிரிக்கெட்டில் ஆடுவதில்லை. 

அதேவேளையில், முதல் 2போட்டிகளில் பென்ச்சில் உட்காரவைக்கப்பட்ட பிரித்வி ஷா அதிரடியான பேட்ஸ்மேன். தொடக்கம் முதலே அடித்து ஆடக்கூடியவர். நல்ல ஸ்டிரைக் ரேட்டில் பெரிய ஸ்கோர் செய்யக்கூடியவர். சர்வதேச டி20 போட்டியில் பிரித்வி ஷா பேட்டிங் ஆடியதில்லை. ஐபிஎல்லில் 63 போட்டிகளில் ஆடியுள்ள பிரித்வி ஷாவின் ஸ்டிரைக் ரேட் 148 ஆகும்.

இந்நிலையில், நியூசிலாந்துக்கு எதிரான கடைசி டி20 போட்டியில் ஷுப்மன் கில்லுக்கு பதிலாக பிரித்வி ஷாவை இறக்கவேண்டும் என்று டேனிஷ் கனேரியா வலியுறுத்தியுள்ளார்.

கோலியுடன் கம்பேர் பண்ற அளவுக்கு பாபர் அசாம் ஒரு ஆளே கிடையாது..! ரொம்ப நியாயமா பேசிய மிஸ்பா உல் ஹக்

இதுகுறித்து பேசிய டேனிஷ் கனேரியா, டி20 கிரிக்கெட்டில் ஷுப்மன் கில் எப்படி ஆடுகிறார் என்றுதான் பார்க்கிறோமே.. பிரித்வி ஷா மிகச்சிறந்த வீரர்; அதிரடியாக ஆடக்கூடிய வீரர். ஷுப்மன் கில்லுக்கு பதிலாக பிரித்வி ஷாவை ஆடவைக்க வேண்டும். பிரித்வி ஷாவிற்கு தொடர் வாய்ப்பளித்தால் பல அதிசயங்களை நிகழ்த்துவார். ஷுப்மன் கில் அருமையான வீரர். அவருடைய பேட்டிங்கில் உள்ள குறைகளை கலைய கில் முனையவேண்டும். ஸ்பின் மற்றும் பவுன்ஸை சிறப்பாக ஆட பயிற்சி செய்ய வேண்டும் என்று டேனிஷ் கனேரியா தெரிவித்துள்ளார்.
 

click me!