IPL 2023: பயிற்சியில் பட்டைய கிளப்பும் தோனி.. வைரல் வீடியோ

Published : Jan 31, 2023, 02:30 PM IST
IPL 2023: பயிற்சியில் பட்டைய கிளப்பும் தோனி.. வைரல் வீடியோ

சுருக்கம்

ஐபிஎல் 16வது சீசனுக்கான பயிற்சியை 2 வாரங்களுக்கு முன்பே தொடங்கிவிட்ட தோனி, வலைப்பயிற்சியில் பெரிய ஷாட்டுகளை ஆடி அசத்திவருகிறார்.    

ஐபிஎல்லில் 15 சீசன்கள் வெற்றிகரமாக நடந்து முடிந்த நிலையில், 16வது சீசன் வரும் ஏப்ரலில் தொடங்குகிறது. இதுவரை 4 முறை கோப்பையை வென்ற சிஎஸ்கே அணி, 5வது முறையாக கோப்பையை வெல்லும் முனைப்பில் உள்ளது.

ஐபிஎல்லில் மும்பை இந்தியன்ஸ் அணி அதிகபட்சமாக 5 முறை கோப்பையை வென்றுள்ள நிலையில், அதற்கடுத்தபடியாக அதிகபட்சமாக 4 முறை கோப்பையை வென்ற, அதிகமுறை ஃபைனலுக்கு முன்னேறிய, 2 சீசன்களை தவிர மற்ற அனைத்து சீசன்களிலும் பிளே ஆஃபிற்கு முன்னேறிய அணி என ஐபிஎல்லின் வெற்றிகரமான அணியாக சிஎஸ்கே அணியை வைத்திருப்பவர் தோனி.

IND vs NZ: தொடரின் முடிவை தீர்மானிக்கும் 3வது டி20 இந்திய அணியில் 2 மாற்றங்கள்! அதிரடி வீரருக்கு அணியில் இடம்

ஐபிஎல்லில் 234 போட்டிகளில் ஆடி 4978 ரன்களை குவித்துள்ள தோனி, அடுத்த சீசனுக்கான பயிற்சியை இப்போதே தொடங்கிவிட்டார். சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து கடந்த 2020ம் ஆண்டே ஓய்வுபெற்றுவிட்ட தோனி, ஐபிஎல்லில் தனது கடைசி போட்டியை சென்னையில் தான் ஆடுவேன் என உறுதியளித்திருந்தார். இந்த ஆண்டு ஐபிஎல் இந்தியாவில் நடப்பதால், இந்திய மண்ணில் ஐபிஎல் கோப்பையை 5வது முறையாக ஜெயித்துவிட்டு தோனி ஓய்வுபெறுவார் என எதிர்பார்க்கப்படுவதால், இதுவே அவரது கடைசி ஐபிஎல் சீசனாக இருக்கலாம்.

ரிக்கி பாண்டிங், மைக்கேல் கிளார்க் ஆகிய லெஜண்ட் கிரிக்கெட்டர்களின் விருது சாதனையை சமன் செய்த ஸ்டீவ் ஸ்மித்

இந்நிலையில், 41 வயதான தோனி, ஐபிஎல் 16வது சீசனுக்கான வலைப்பயிற்சியை மற்ற அனைத்து வீரர்களுக்கும் முன்பாகவே தொடங்கிவிட்டார். ஐபிஎல்லில் மட்டுமே ஆடிவரும் தோனிக்கு வேறு போட்டிகளில் ஆடும் பயிற்சி இல்லை என்பதால், முன்கூட்டியே வலைப்பயிற்சியை தொடங்கிவிட்டார் தோனி. 2 வாரங்களுக்கு முன்பே பயிற்சியை தொடங்கிவிட்ட தோனி, வலைப்பயிற்சியில் பெரிய ஷாட்டுகளை அடித்து ஆடிய வீடியோ வைரலாகிவருகிறது. அதைக்கண்ட ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.
 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

Yashasvi Jaiswal: வைபவ் வந்ததும் ஜெய்ஸ்வாலை கழட்டிவிடும் RR..? MI உடன் மெகா டிரேட் டீல்..?
Test Cricket : ஒரே ஓவரில் அதிக ரன்கள் கொடுத்த டாப் 5 பவுலர்கள்!