இந்த வயசுலயும் ஃபிட்னெஸில் 25 வயது வீரர் என்கிட்ட நிற்க முடியாது..! ஓய்வு பெறும் ஐடியாவே இல்ல - ஷோயப் மாலிக்

By karthikeyan VFirst Published Jan 31, 2023, 10:30 AM IST
Highlights

40 வயதிலும் தனது ஃபிட்னெஸ்  25 வயது இளம் வீரருக்கு நிகராக இருப்பதால், டி20 கிரிக்கெட்டிலிருந்து ஓய்வுபெறும் ஐடியாவே தனக்கில்லை என்று ஷோயப் மாலிக் தெரிவித்துள்ளார்.
 

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் சீனியர் வீரர் ஷோயப் மாலிக். 1999ம் ஆண்டு சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் அறிமுகமான ஷோயப் மாலிக், 2001ம் ஆண்டு டெஸ்ட்டிலும் அறிமுகமானார். டி20 கிரிக்கெட் அறிமுகப்படுத்தப்பட்டதிலிருந்து ஆடிவருகிறார்.

ஷோயப் மாலிக் சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமாகி 24 ஆண்டுகள் ஆகிவிட்டது. பாகிஸ்தான் அணிக்காக 35 டெஸ்ட், 287 ஒருநாள் மற்றும் 125 டி20 போட்டிகளில் ஆடியுள்ளார். டெஸ்ட் கிரிக்கெட்டில் பெரிதாக சோபிக்காத ஷோயப் மாலிக், ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட்டில் பாகிஸ்தான் அணியின் நட்சத்திர வீரராக நீண்டகாலம் ஆடினார். டெஸ்ட் மற்றும் ஒருநாள் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வுபெற்றுவிட்ட ஷோயப் மாலிக், டி20 கிரிக்கெட்டில் இன்னும் சாதிப்பதற்கு தனக்கு நிறைய இருக்கிறது என்ற நம்பிக்கையில் ஓய்வு அறிவிக்கவில்லை.

2022ம் ஆண்டுக்கான கிரிக்கெட் ஆஸ்திரேலியா விருதுகளை வென்ற வீரர்கள்.! முழு பட்டியல்

டி20 கிரிக்கெட்டில் நன்றாகவும் ஆடிவருகிறார். 2021 டி20 உலக கோப்பையில் ஆடிய பாகிஸ்தான் அணியில் சீனியர் வீரர்களான ஷோயப் மாலிக் மற்றும் முகமது ஹஃபீஸ் ஆகிய இருவரும் ஆடினர். அந்த உலக கோப்பையில் பாகிஸ்தான் அணி அரையிறுதியுடன் வெளியேற, ஹஃபீஸ் ஓய்வு அறிவித்தார். அந்த உலக கோப்பையில் பின்வரிசையில் அபாரமாக ஆடிய ஷோயப் மாலிக், 2022 டி20 உலக கோப்பையிலும் ஆடும் முனைப்பில் இருந்தார். ஆனால் அந்த தொடருக்கான பாகிஸ்தான் அணியில் மாலிக் புறக்கணிக்கப்பட்டார். அணி தேர்வு பாரபட்சமாக இருப்பதாகவும், கேப்டன் பாபர் அசாம் தனக்கு வேண்டப்பட்ட வீரர்களை மட்டும் அணியில் எடுப்பதாகவும் விமர்சித்திருந்தார்.

தனக்கு டி20 அணியில் இடம் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் உள்ள ஷோயப் மாலிக், ஓய்வு பெறும் ஐடியாவே இல்லை என்று தெரிவித்துள்ளார். இதுகுறித்து பேசிய ஷோயப் மாலிக், நான் தான் பாகிஸ்தான் அணியின் மூத்த வீரர். இந்த வயதிலும் 25 வயது இளம் வீரருக்கு நிகரான ஃபிட்னெஸுடன் இருக்கிறேன். இந்தளவிற்கு நான் ஃபிட்னெஸுடன் இருப்பதற்கு என்னை எது ஊக்குவிக்கிறதென்றால், களத்திற்கு சென்று இன்னும் எனது அணிக்காக நிறைய ஸ்கோர் செய்யவேண்டும் என்ற வேட்கை தான். நான் இன்னும் கிரிக்கெட் ஆடிக்கொண்டு தான் இருக்கிறேன். நான் ஓய்வை பற்றி யோசிக்கவேயில்லை. 

இப்போ இல்லைனா எப்போ..? இந்திய வீரருக்காக குரல் கொடுத்த பாக்., முன்னாள் வீரர்

எனது கிரிக்கெட்டை மகிழ்ந்து ஆடிக்கொண்டிருக்கிறேன். எனக்கு வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் மகிழ்ச்சியுடன் ஆடுகிறேன். எனவே இப்போதைக்கு எனக்கு ஓய்வு பெறும் ஐடியாவே இல்லை. டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளிலிருந்து ஓய்வு பெற்றுவிட்டேன். ஆனால் டி20 கிரிக்கெட்டில் இன்னும் எனது பெஸ்ட் ஷாட்டுகளை ஆடுவதால் தொடர்ந்து ஆட விரும்புகிறேன் என்றார் ஷோயப் மாலிக்.

click me!