பவுண்டரியை தடுக்க ஓடிய போது காலில் காயம்; வலியால் துடித்த கேஎல் ராகுல்!

Published : May 01, 2023, 07:58 PM IST
பவுண்டரியை தடுக்க ஓடிய போது காலில் காயம்; வலியால் துடித்த கேஎல் ராகுல்!

சுருக்கம்

லக்னோ அணியின் கேப்டனான கேஎல், பாப் டூப்ளெசிஸ் அடித்த பவுண்டரியை தடுக்க ஓடிய போது காலில் காயம் ஏற்பட்ட நிலையில் வலியால் துடித்து மைதானத்திலேயே படுத்துள்ளார்.

லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகளுக்கு இடையிலான 43 ஆவது போட்டி தற்போது லக்னோ மைதானத்தில் நடந்து வருகிறது. இதில், டாஸ் வென்ற ஆர்சிபி அணியின் கேப்டன் பாப் டூப்ளெசிஸ் பேட்டிங் தேர்வு செய்தார். அதன்படி பாப் டூப்ளெசிஸ் மற்றும் விராட் கோலி இருவரும் களமிறங்கினர். இதில், போட்டியின் 2ஆவது ஓவரை மார்கஸ் ஸ்டோய்னிஸ் வீசினார்.

லக்னோவில் சாதனை படைத்து மனைவிக்கு பர்த்டே ட்ரீட் கொடுக்க காத்திருக்கும் கிங் கோலி!

லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ்:

கேஎல் ராகுல் (கேப்டன்), கைல் மேயர்ஸ், தீபக் கூடா, மார்கஸ் ஸ்டோய்னிஸ், குர்ணல் பாண்டியா, நிக்கோலஸ் பூரன் (விக்கெட் கீப்பர்), கிருஷ்ணப்பா கௌதம், ரவி பிஷ்னாய், நவீன் உல் ஹாக், அமித் மிஸ்ரா மற்றும் யாஷ் தாகூர்.

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு:

விராட் கோலி, பாப் டூப்ளெசிஸ் (கேப்டன்), அனுஜ் ராவத், கிளென் மேக்ஸ்வெல், மஹிபால் லோம்ரோர், தினேஷ் கார்த்திக் (விக்கெட் கீப்பர்), சுயாஷ் பிரபுதேஷாய், வணிந்து ஹசரங்கா, கரண் சர்மா, முகமது சிராஜ், ஜோஷ் ஹசல்வுட்

டேவிட் வில்லிக்குப் பதிலாக களமிறங்கும் கிரிக்கெட் வர்ணனையாளர் கேதர் ஜாதவ்!

கடைசி பந்தை பாப் டூப்ளெசிஸ் எதிர்கொண்டார். அவர் பந்தை ஆஃப் சைடு திசையை நோக்கி அடிக்கவே, பீல்டிங் செய்து கொண்டிருந்த கேஎல் ராகுல் பவுண்டரியை தடுக்க பின்னாடியே ஓடிய நிலையில், அவரது காலின் தொடைப் பகுதியில் தடைப்பிடிப்பு போன்று ஏற்பட்டுள்ள நிலையில், வலியால் துடித்த அப்படியே மைதானத்திலேயே படுத்துள்ளார்.

உன்னுடைய பைத்தியக்காரத்தனத்தின் மூலமாக உன்னை நேசிக்கிறேன் -மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து சொன்ன விராட் கோலி!

அதன்பிறகு மருத்துவர்கள் வந்து அவருக்கு முதலிதவி செய்து அழைத்துச் சென்றனர். எனினும், மறுபடியும் பீல்டிங் செய்ய வருவாரா இல்லை பேட்டிங் ஆடுவதற்கு மட்டும் வருவாரா என்பது குறித்து தகவல் இல்லை. அவருக்கு பதிலாக குர்ணல் பாண்டியா கேப்டனாக செயல்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. 2 ஓவர்கள் முடிவில் ஆர்சிபி அணி 16 ரன்கள் எடுத்திருந்தது.

 

 

PREV
RK
About the Author

Rsiva kumar

நான் சிவக்குமார். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 7 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். சினிமா, கிரிக்கெட், ஜோதிடம், ஆன்மீகம் தொடர்பான செய்திகள் எழுதி வருகிறேன். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழ் இணையதளத்தில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறேன்.சிவக்குமார் எம்பிஏ படித்து முடித்துள்ளார். இவருக்கு டிஜிட்டல் மீடியாவில் 8 வருட பணி அனுபவம் உள்ளது. இப்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, விளையாட்டு, ஜோதிடம், ஆன்மிகம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். அதுதொடர்பான சிறப்பு செய்திகளை எழுதி வருகிறார்.Read More...
Read more Articles on
click me!

Recommended Stories

ஐபிஎல் மினி ஏலம்.. 1005 வீரர்களை தூக்கி எறிந்த BCCI.. 350 வீரர்களுடன் லிஸ்ட் ரெடி
தென்னாப்பிரிக்கா டி20 தொடரில் ஹர்திக் பாண்ட்யா படைக்க போகும் 'மெகா' இரட்டை சாதனை!