LSG vs RR: பிளே ஆஃபிற்கு முன்னேற 2 அணிகளுக்குமே முக்கியமான போட்டி..! இரு அணிகளின் உத்தேச ஆடும் லெவன்

By karthikeyan VFirst Published May 15, 2022, 5:17 PM IST
Highlights

லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு இடையேயான இன்றைய போட்டியில் களமிறங்கும் இரு அணிகளின் உத்தேச ஆடும் லெவனை பார்ப்போம்.
 

ஐபிஎல் 15வது சீசன் லீக் சுற்றின் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இனிவரும் ஒருசில போட்டிகள் அனைத்துமே முக்கியமானவை. ஹர்திக் பாண்டியா தலைமையில் இந்த சீசனில் புதிதாக களமிறங்கிய குஜராத் டைட்டன்ஸ் அணி முதல் அணியாக பிளே ஆஃபிற்கு முன்னேறியுள்ளது.

மும்பை இந்தியன்ஸ், சிஎஸ்கே அணிகள் பிளே ஆஃப் வாய்ப்பை இழந்துவிட்டன. சன்ரைசர்ஸ் அணி கிட்டத்தட்ட பிளே ஆஃப் வாய்ப்பை இழந்துவிட்டது. லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ், டெல்லி கேபிடள்ஸ், ஆர்சிபி, பஞ்சாப் கிங்ஸ் ஆகிய அணிகளுக்கு பிளே ஆஃப் வாய்ப்பு உள்ளது.

இந்நிலையில், இன்றைய போட்டியில் பிளே ஆஃபிற்கு முன்னேறும் வலுவான வாய்ப்பை கொண்ட லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதுகின்றன. 

மும்பை ப்ரபோர்ன் மைதானத்தில் நடக்கும் இந்த போட்டி லக்னோ மற்றும் ராஜஸ்தான் ஆகிய இரு அணிகளுக்குமே மிக முக்கியம். இந்த போட்டியில் களமிறங்கும் இரு அணிகளின் ஆடும் லெவன் காம்பினேஷனிலும் மாற்றம் எதுவும் செய்யப்பட வாய்ப்பில்லை. இரு அணிகளுமே சிறப்பாக ஆடிவருவதால் எந்த மாற்றமும் செய்வதற்கான அவசியமில்லை. அதனால் இரு அணிகளுமே கடந்த போட்டியில் ஆடிய அதே ஆடும் லெவன் காம்பினேஷனுடனேயே களமிறங்கும்.

உத்தேச லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணி:

டி காக் (விக்கெட் கீப்பர்), கேஎல் ராகுல் (கேப்டன்), தீபக் ஹூடா, மார்கஸ் ஸ்டோய்னிஸ், க்ருணல் பாண்டியா, ஆயுஷ் பதோனி, ஜேசன் ஹோல்டர், துஷ்மந்தா சமீரா, ரவி பிஷ்னோய், ஆவேஷ் கான், மோசின் கான்.

உத்தேச ராஜஸ்தான் ராயல்ஸ் அணி:

யஷஸ்வி ஜெய்ஸ்வால், ஜோஸ் பட்லர், சஞ்சு சாம்சன் (கேப்டன், விக்கெட் கீப்பர்), தேவ்தத் படிக்கல், ராசி வாண்டர் டசன், ரியான் பராக், ரவி அஷ்வின், டிரெண்ட் போல்ட், பிரசித் கிருஷ்ணா, யுஸ்வேந்திர சாஹல், குல்தீப் சென்.
 

click me!