என் கெரியரில் நான் எதிர்கொண்டதில் மிகக்கடினமான பவுலர்கள் 2 பேர்; அதில் ஒருவர் இந்தியர்..! சங்கக்கரா அதிரடி

By karthikeyan VFirst Published Aug 10, 2020, 10:39 PM IST
Highlights

சர்வதேச கிரிக்கெட்டின் ஆல்டைம் சிறந்த பேட்ஸ்மேன்களில் ஒருவரான குமார் சங்கக்கரா, தனது கெரியரில் தான் எதிர்கொண்டதிலேயே மிகவும் கடினமான பவுலர்கள் 2 பேர் என்று தெரிவித்துள்ளார். 
 

சர்வதேச கிரிக்கெட்டின் ஆல்டைம் சிறந்த பேட்ஸ்மேன்களில் ஒருவரான குமார் சங்கக்கரா, தனது கெரியரில் தான் எதிர்கொண்டதிலேயே மிகவும் கடினமான பவுலர்கள் 2 பேர் என்று தெரிவித்துள்ளார். 

இலங்கை அணியின் முன்னாள் கேப்டனும் மிகச்சிறந்த விக்கெட் கீப்பர் - பேட்ஸ்மேனுமான குமார் சங்கக்கரா, 2000ம் ஆண்டிலிருந்து 2015 வரை இலங்கை அணியில் ஆடினார். 15 ஆண்டுகள் சர்வதேச கிரிக்கெட்டில் ஆடிய குமார் சங்கக்கரா, தனது கெரியரில் நிறைய சாதனைகளையும் தனது அணிக்கு நிறைய வெற்றிகளையும் பெற்றுக்கொடுத்துள்ளார்.

சர்வதேச கிரிக்கெட்டில் அதிக ரன்களை குவித்த வீரர்கள் பட்டியலில் சச்சின் டெண்டுல்கருக்கு அடுத்த இடத்தில் சங்கக்கரா இருக்கிறார். சர்வதேச கிரிக்கெட்டில் 28,016 ரன்களை குவித்துள்ள சங்கக்கரா, ஆல்டைம் சிறந்த பேட்ஸ்மேன்களில் முக்கியமானவர். தனது கெரியரில் பெரியளவில் ஃபார்ம் அவுட் ஆகாமல், கெரியர் முழுக்க சிறப்பாக ஆடியவர் சங்கக்கரா. 

தனது கெரியரில் வாசிம் அக்ரம், வக்கார் யூனிஸ், மெக்ராத், ஷேன் வார்ன், பிரெட் லீ, ஷோயப் அக்தர், அனில் கும்ப்ளே, ஹர்பஜன் சிங், ஷான் போலாக், ஆலன் டொனால்டு, டேல் ஸ்டெய்ன், மிட்செல் ஸ்டார்க் உள்ளிட்ட பல சிறந்த பவுலர்களை எதிர்கொண்டு ஆடியவர் சங்கக்கரா. 

மிகச்சிறந்த பல பவுலர்களை அவர் எதிர்கொண்ட போதிலும், அவர்களில் மிகச்சிறந்தவர்களாக இருவரை தேர்வு செய்துள்ளார். வாசிம் அக்ரம் மற்றும் ஜாகீர் கான் ஆகிய இருவரும் தான், தான் எதிர்கொண்டதிலேயே மிகக்கடினமான பவுலர்கள் என்று தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து கருத்து தெரிவித்த சங்கக்கரா, வாசிம் அக்ரமை எதிர்கொள்வது கொடுங்கனவு. அதேபோல ஜாகீர் கானை நான் அதிகமுறை எதிர்கொண்டு ஆடியிருக்கிறேன் என்றபோதிலும், அவரது பவுலிங் எப்போதுமே எதிர்கொள்வதற்கு கடினமாக இருக்கும் என்று சங்கக்கரா தெரிவித்துள்ளார்.
 

click me!