கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் ஆல்டைம் பெஸ்ட் லெவன்..! முன்னாள் வீரரின் அதிரடி தேர்வு

By karthikeyan VFirst Published Aug 10, 2020, 9:03 PM IST
Highlights

இந்திய அணியின் முன்னாள் தொடக்க வீரர் ஆகாஷ் சோப்ரா, கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் ஆல்டைம் லெவனை தேர்வு செய்துள்ளார். 
 

ஐபிஎல்லில் 12 சீசன்கள் வெற்றிகரமாக நடந்து முடிந்துள்ள நிலையில், கொரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியில் ஒருவழியாக ஐபிஎல் 13வது சீசன் நடப்பது உறுதியாகியுள்ளது. வரும் செப்டம்பர் 19ம் தேதி 13வது சீசன் ஐக்கிய அரபு அமீரகத்தில் தொடங்குகிறது. ஐபிஎல்லில் ஆடும் அனைத்து வீரர்களும் தீவிரமாக தயாராகிவருகின்றனர். 

ஐபிஎல் டைட்டிலை இதுவரை ஒருமுறை கூட வென்றிராத 3 அணிகளில் ஒன்றான கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி, இம்முறை கேஎல் ராகுலின் கேப்டன்சியில் களமிறங்கவுள்ளது. கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியில் கில்கிறிஸ்ட், யுவராஜ் சிங், ஜெயவர்தனே, சங்கக்கரா, பிரெட் லீ உள்ளிட்ட பல சிறந்த வீரர்கள் அணியில் ஆடியும் அந்த அணியால் ஐபிஎல்லின் ஆரம்பக்கட்டத்தில் கோப்பையை வெல்லமுடியவில்லை. 

ஐபிஎல் 12 சீசன்களில் ஒருமுறை கூட கோப்பையை வெல்லாத பஞ்சாப் அணி, கேஎல் ராகுலின் கேப்டன்சியில் இம்முறை முதல் முறையாக கோப்பையை வெல்லும் முனைப்பில் உள்ளது. இந்நிலையில், இந்திய அணியின் முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா, தனது ஆல்டைம் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியை தேர்வு செய்துள்ளார். 

கிறிஸ் கெய்ல் மற்றும் கேஎல் ராகுல் ஆகிய இருவரையும் தொடக்க வீரர்களாக தேர்வு செய்துள்ளார். கெய்ல், 2018 மற்றும் 2019 ஆகிய 2 சீசன்களிலும் ஆடியுள்ளார். இன்னும் பஞ்சாப் அணியில் தான் இருக்கிறார். 3ம் வரிசையில் ஷான் மார்ஷையும் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்களாக ஜெயவர்தனே, மில்லர், யுவராஜ் சிங் ஆகியோரையும் ஸ்பின்னர்களாக பியூஷ் சாவ்லா, அக்ஸர் படேல் மற்றும் ரவிச்சந்திரன் அஷ்வின் ஆகிய மூவரையும் தேர்வு செய்துள்ள ஆகாஷ் சோப்ரா, பிரவீன் குமார் மற்றும் சந்தீப் ஷர்மா ஆகிய இருவரையும் ஃபாஸ்ட் பவுலர்களாக தேர்வு செய்துள்ளார். அணியின் கேப்டனாக ஜெயவர்தனேவை தேர்வு செய்துள்ளார். ஜெயவர்தனே 2008-2010 காலக்கட்டத்தில் 3 சீசன்களில் ஆடியுள்ளார்.

கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியில் ஆடியவர்களில் குறிப்பிடத்தகுந்தவர்களான சேவாக், கில்கிறிஸ்ட், சங்கக்கரா, ஜார்ஜ் பெய்லி, பிரெட் லீ ஆகியோரை தவிர்த்துள்ளார் ஆகாஷ் சோப்ரா.

ஆகாஷ் சோப்ரா தேர்வு செய்த ஆல்டைம் கிங்ஸ் லெவன் பஞ்சாப் லெவன்:

கிறிஸ் கெய்ல், கேஎல் ராகுல், ஷான் மார்ஷ், மஹேலா ஜெயவர்தனே(கேப்டன்), டேவிட் மில்லர், யுவராஜ் சிங், பியூஷ் சாவ்லா, அக்ஸர் படேல், ரவிச்சந்திரன் அஷ்வின், பிரவீன் குமார், சந்தீப் ஷர்மா.
 

click me!