தோனியையே மட்டம் தட்டி பேசுற அளவுக்கு ஆயிட்டியா நீ..? அவரு இல்லைனா நீயெல்லாம் ஒரு ஆளே இல்ல!! நாங்க சொல்லல.. நம்பர் சொல்லுது

By karthikeyan VFirst Published May 15, 2019, 12:32 PM IST
Highlights

ஸ்பின் பவுலர்களின் முதுகெலும்பாக தோனி திகழ்கிறார். எந்த திட்டமும் இல்லாமல் பவுலர்கள் நிராயுதபாணியாக இருக்கும்போது, அவர்களின் ஒரே நம்பிக்கை தோனி தான். 
 

இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனி, பேட்டிங், விக்கெட் கீப்பிங்கை கடந்து ஒரு முழுமையான கிரிக்கெட் வீரர். அவர் தற்போது கேப்டனாக இல்லாவிட்டாலும் அனுபவமான ஆலோசனைகள் மூலம் அணியையும் கேப்டன் கோலியையும் வழிநடத்துகிறார். 

உலக கோப்பை தொடங்க உள்ள நிலையில், இந்த உலக கோப்பையை வெல்ல வாய்ப்புள்ள அணிகளில் ஒன்றாக இந்திய அணி பார்க்கப்படுகிறது. தோனி இந்த உலக கோப்பையில் முக்கிய பங்காற்றுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. தோனியின் அனுபவம் இந்த உலக கோப்பையில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. 

அதிவேக ஸ்டம்பிங், சமயோசித ரன் அவுட்டுகள், அபாரமான கேட்ச்கள் என விக்கெட் கீப்பிங்கில் மிரட்டுபவர் தோனி. அத்துடன் இல்லாமல், எதிரணி வீரர்களின் பேட்டிங் உத்திகளை அறிந்து, அவர்களின் பிளஸ், மைனஸ்களை தெரிந்துகொண்டு அதற்கேற்றபடி பவுலர்களுக்கு ஆலோசனைகளை வழங்குவதோடு ஃபீல்டிங் செட்டப்பில் கேப்டனுக்கும் ஆலோசனைகளை வழங்குவார். அவரது ஆலோசனைகள் நல்ல பலனை கொடுப்பதோடு, பல தருணங்களில் திருப்புமுனைகளாக அமைந்துவிடும். 

தோனியின் ஆலோசனைகளின் மூலம் அதிகம் பயனடைந்தவர்கள் என்றால் அது குல்தீப்பும் சாஹலும்தான். ஸ்பின் பவுலர்களான அவர்களுக்கு அவ்வப்போது ஐடியா கொடுத்துக்கொண்டே இருப்பார் தோனி. எந்த திட்டமும் இல்லாமல் அவர்கள் நிராயுதபாணியாக இருக்கும்போது, அவர்களின் ஒரே நம்பிக்கை தோனி தான். 

இப்படி, தோனி கொடுக்கும் ஆலோசனைகளை பின்பற்றி அவர்கள் விக்கெட்டுகளை பலமுறை வீழ்த்தியிருக்கிறார்கள். குல்தீப் மற்றும் சாஹலுக்கு அப்பாற்பட்டு பார்ட் டைம் ஸ்பின்னரான கேதர் ஜாதவிற்கும் எந்த பேட்ஸ்மேனுக்கு எப்படி பந்துவீச வேண்டும் என தோனி தொடர்ந்து வழிகாட்டிவருகிறார். கேதர் ஜாதவும் அவ்வப்போது முக்கியமான விக்கெட்டுகளை வீழ்த்தி இந்திய அணிக்கு முக்கியமான திருப்புமுனைகளை அமைத்து கொடுக்கிறார்.

இவ்வாறு ஸ்பின் பவுலர்களின் முதுகெலும்பாக தோனி திகழ்கிறார். ஸ்பின் பவுலர்களிடம் எந்த திட்டமும் இல்லாத நிலையில், தோனி சொல்வதை செய்தாலே போதும் என்கிற அளவுக்கு அவரது ஆலோசனைகள் இருக்கும். 

இப்படி இருக்கும் நிலையில், தோனியின் ஆலோசனைகள் பெரும்பாலும் தவறானதாகவே இருக்கும் என்றும் ஆனால் அதை தோனியிடம் சொல்ல முடியாது என்றும் குல்தீப் யாதவ் தெரிவித்திருந்தார். குல்தீப்பின் ஸ்டேட்மெண்ட் கிரிக்கெட் ரசிகர்களை கோபப்படுத்தியதில் ஆச்சரியம் ஏதுமில்லை. 

ஏனெனில் தோனியின் ஆலோசனைகளில் மிகவும் பயனடைந்தவர் என்றால் அது குல்தீப் யாதவ் தான். தோனியின் வழிகாட்டுதலின் படி பந்துவீசி விக்கெட்டுகளை வாரி குவித்துள்ளார். தோனி ஆடும் போட்டிகளில் சிறப்பாக பந்துவீசியுள்ள குல்தீப் யாதவ், தோனி இல்லாத போட்டிகளில் படுமோசமாக சொதப்பியுள்ளார். 

இதுவரை 44 ஒருநாள் போட்டிகளில் குல்தீப் யாதவ் ஆடியுள்ளார். இந்த 44 போட்டிகளில் 40ல் தோனி ஆடியுள்ளார். தோனி ஆடிய அந்த 40 போட்டிகளில் 87 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்  குல்தீப். அந்த 40 போட்டிகளிலும் அவரது பந்துவீச்சில் ரன்களும் கட்டுக்கோப்பாகவே உள்ளன. ஆனால் தோனி ஆடாத போட்டிகளில் படுமோசமாக சொதப்பியுள்ளார் குல்தீப் யாதவ்.

ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இந்தியாவில் நடந்த ஒருநாள் தொடரில் கடைசி இரண்டு போட்டிகளில் தோனி ஆடவில்லை. அந்த போட்டிகளில் குல்தீப்பின் உண்மை நிலை தெரிந்தது. அந்த இரண்டு போட்டிகளிலும் மொத்தமாக 20 ஓவர்களை வீசி 138 ரன்களை விட்டுக்கொடுத்த குல்தீப், வெறும் 3 விக்கெட்டுகளை மட்டுமே வீழ்த்தியிருந்தார். 

தோனி ஆடாத போட்டிகளில், எதிரணி பேட்ஸ்மேன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து ஆடும் போது, என்ன செய்வதென்று தெரியாமல் நிராயுதபாணியாகிறார் குல்தீப். தோனி இல்லையென்றால், குல்தீப் யாதவின் பவுலிங் இந்திய அணிக்கு எந்தவிதமான தாக்கத்தையும் ஏற்படுத்துவதில்லை என்ற நிலையைத்தான் நம்பர்கள் உணர்த்துகின்றன. 

ஆனால் கொஞ்சம்கூட நன்றியோ சீனியர் வீரரின் மீது மரியாதையோ இல்லாமல் குல்தீப் யாதவ் திமிராக பேசியிருக்கிறார். 
 

click me!