பாகிஸ்தானுக்கு எதிரான ஆசிய கோப்பை 2023 சூப்பர் 4 சுற்றின் 3ஆவது போட்டியில் இந்திய வீரர் கேஎல் ராகுல் சதம் அடித்துள்ளார்.
பாகிஸ்தான் மற்றும் இலங்கையில் ஆசிய கோப்பை 2023 கிரிக்கெட் தொடர் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இதில், லீக் போட்டிகள் முடிந்த நிலையில், தற்போது சூப்பர் 4 சுற்று போட்டிகள் நடந்து வருகிறது. இதில், 3ஆவது சூப்பர் 4 சுற்றில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் விளையாடி வருகின்றன. நேற்று தொடங்கிய இந்தப் போட்டியில் இந்திய அணி 24.1 ஓவர்களில் 2 விக்கெட் இழப்பிற்கு 147 ரன்கள் எடுத்திருந்தது.
காயத்திலிருந்து மீண்டு வந்து முதல் போட்டியிலேயே அரைசதம் அடித்த கேஎல் ராகுல்!
undefined
இதில், ரோகித் சர்மா 56 ரன்களும், சுப்மன் கில் 58 ரன்களும் எடுத்தனர். மேலும், கேஎல் ராகுல் 17 ரன்களுடனும், விராட் கோலி 8 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். அப்போது மழை குறுக்கிட்டது. பின்னர் நின்றதைத் தொடர்ந்து மீண்டும் போட்டி தொடங்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் மீண்டும் மழை பெய்ததைத் தொடர்ந்து போட்டி ரிசர்வ் டேக்கு அறிவிக்கப்பட்டது.
இன்று பிற்பகல் 3 மணிக்கு தொடங்க இருந்த போட்டியானது மழையால் தடைபட்டது, பின்னர் 4.40 மணிக்கு போட்டி தொடங்கப்பட்டது. இதையடுத்து, கேஎல் ராகுல் மற்றும் விராட் கோலி இருவரும் இன்றைய போட்டியை தொடங்கினர். இதில் தொடக்கம் முதல் நிதானமாக விளையாடிய கேஎல் ராகுல் அவ்வப்போது பவுண்டரியும், சிக்ஸரும் விளாசினார். ஐபிஎல் தொடரின் போது ஏற்பட்ட காயம் காரணமாக அறுவை சிகிச்சை பெற்று வந்து கிரிக்கெட் அகாடமியில் பயிற்சி மேற்கொண்டு வந்தார்.
அதன் பிறகு உடல் தகுதியை நிரூபித்த நிலையில் இந்திய அணியில் இடம் பெற்றார். இந்த நிலையில் தான் இன்றைய போட்டியில் பாகிஸ்தானுக்கு எதிராக 4ஆவது இடத்தில் களமிறங்கி ஒருநாள் போட்டியில் தனது 14ஆவது அரைசதத்தை பூர்த்தி செய்தார். இந்தப் போட்டியில் 60 பந்துகளில் அரைசதம் அடித்து அசத்தியிருந்தார். அதன் பிறகும் கூட நிதானமாக ரன்கள் சேர்த்து வந்து ஒரு நாள் போட்டியில் தனது 6ஆவது சதத்தை பூர்த்தி செய்தார். இதுவரையில் 55 ஒரு நாள் போட்டிகளில் விளையாடி 100 பந்துகளில் 2 சிக்ஸர்கள், 10 பவுண்டரிகள் உள்பட 100 ரன்கள் குவித்துள்ளார்.
தற்போது வரையில் இந்திய அணி 48.1 ஓவர்களில் 2 விக்கெட் இழப்பிற்கு 332 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறது. இதில் விராட் கோலியும் தனது 278 ஆவது ஒரு நாள் போட்டியில் 47ஆவது சதத்தை பூர்த்தி செய்துள்ளார். அதுமட்டுமின்றி 98 ரன்கள் எடுத்திருந்த போது ஒரு நாள் போட்டிகளில் 13,000 ரன்களை கடந்து சச்சின் சாதனையை முறியடித்துள்ளார். இதற்கு முன்னதாக சச்சின் டெண்டுல்கர் 321 இன்னிங்ஸில் 13000 ரன்கள் அடித்திருந்தார். ஆனால், விராட் கோலி 267 இன்னிங்ஸில் 13000 ரன்களை கடந்துள்ளார். ரிக்கி பாண்டிங்கும் 341 இன்னிங்ஸில் 13000 ரன்கள் கடந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
HUNDRED FOR KL RAHUL...!!!!
What a great story written by Rahul today at Colombo, coming back from injury and he smashed a terrific hundred from 101 balls against Pakistan in the Asia Cup. pic.twitter.com/00eShJ2Rjf