India vs West Indies: டி20 தொடரிலிருந்து கேஎல் ராகுல், அக்ஸர் படேல் விலகல்.! மாற்று வீரர்கள் அறிவிப்பு

Published : Feb 11, 2022, 07:30 PM IST
India vs West Indies: டி20 தொடரிலிருந்து கேஎல் ராகுல், அக்ஸர் படேல் விலகல்.! மாற்று வீரர்கள் அறிவிப்பு

சுருக்கம்

வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான டி20 தொடருக்கான இந்திய அணியிலிருந்து கேஎல் ராகுல் மற்றும் அக்ஸர் படேல் ஆகிய இருவரும் விலகியதையடுத்து மாற்று வீரர்களாக ருதுராஜ் கெய்க்வாட் மற்றும் தீபக் ஹூடா ஆகிய இருவரும் சேர்க்கப்பட்டுள்ளனர்.  

இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் இடையேயான 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரின் கடைசி போட்டி இன்று நடந்துவருகிறது. இதையடுத்து டி20 தொடர் நடக்கவுள்ளது. ஐபிஎல் ஏலம் நாளையும் (பிப்ரவரி 12) நாளை மறுநாளும் நடக்கவுள்ளதால், டி20 போட்டிகள் வரும் 16ம் தேதி தொடங்குகிறது. 

வரும் 16, 18 மற்றும் 20 ஆகிய தேதிகளில் 3 டி20 போட்டிகள் நடக்கவுள்ளன. இந்த தொடருக்கான இந்திய அணியிலிருந்து கேஎல் ராகுல் மற்றும் அக்ஸர் படேல் ஆகிய இருவரும் விலகியுள்ளனர். 

கேஎல் ராகுல் 2வது ஒருநாள் போட்டியில் ஃபீல்டிங் செய்தபோது காயமடைந்ததால், 3வது ஒருநாள் போட்டியிலும் அவர் ஆடவில்லை. இந்நிலையில், டி20 தொடருக்கான அணியிலிருந்து விலகியுள்ளார். அதேபோல கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்த அக்ஸர்  படேலும் டி20 அணியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.

கேஎல் ராகுல் மற்றும் அக்ஸர் படேல் ஆகிய இருவருக்கு பதிலாக முறையே ருதுராஜ் கெய்க்வாட் மற்றும் தீபக் ஹூடா ஆகிய இருவரும் அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

கேஎல் ராகுல் விலகியதால், இஷான் கிஷனின் ரூட் கிளியர் ஆகியுள்ளது. ஏனெனில் ராகுல் ஆடினால், அவர்தான் ரோஹித்துடன் தொடக்க வீரராக இறங்குவார். இப்போது அவர் ஆடாததால், ரோஹித்துடன் இஷான் கிஷன் தான் தொடக்க வீரராக இறங்குவார்.

மாற்றம் செய்யப்பட்ட இந்திய டி20 அணி:

ரோஹித் சர்மா (கேப்டன்), இஷான் கிஷன், விராட் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர், சூர்யகுமார் யாதவ், ரிஷப் பண்ட் (விக்கெட் கீப்பர்), வெங்கடேஷ் ஐயர், தீபக் சாஹர், ஷர்துல் தாகூர், ரவி பிஷ்னோய், யுஸ்வேந்திர சாஹல், வாஷிங்டன் சுந்தர், முகமது சிராஜ், புவனேஷ்வர் குமார், ஆவேஷ் கான், ஹர்ஷல் படேல், ருதுராஜ் கெய்க்வாட், தீபக் ஹூடா.
 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

IND vs SA: அபிஷேக் சர்மா அதிரடியால் ஈசியாக சேஸ் செய்த இந்திய அணி! தொடரில் 2-1 என முன்னிலை!
Tilak Varma: சேஸிங்கில் 'கிங்' கோலிக்கே சவால் விடும் திலக் வர்மா..! மெகா ரிக்கார்ட்..!