IPL 2023: மாற்றமே இல்லாமல் வரும் கொல்கத்தா; வாஷிங்டன் சுந்தரை கழற்றிவிட்ட சன்ரைசர்ஸ் ஹைதராபாத்!

By Rsiva kumar  |  First Published Apr 14, 2023, 7:18 PM IST

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் கேப்டன் நிதிஷ் ராணா பவுலிங் தேர்வு செய்துள்ளார்.


ஐபிஎல் 2023 கிரிக்கெட் திருவிழா விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இன்று கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடக்கும் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் மோதுகின்றன. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் கேப்டன் நிதிஷ் ராணா பவுலிங் தேர்வு செய்துள்ளார். ஏற்கனவே கடைசி 2 போட்டிகளில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி வெற்றி பெற்றதால், அதே அணியுடன் இந்தப் போட்டியிலும் களமிறங்குகிறது. அதுமட்டுமின்றி, இந்த மைதானம் சுழலுக்கு சாதகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இம்பேக்ட் பிளேயராக வெங்கடேஷ் ஐயர் வருவதற்கு வாய்ப்பிருக்கிறது.

IPL 2023: ஓ இது கொல்கத்தா பிட்ச்சா? அப்போ ஹைதராபாத்திற்கு தான் வாய்ப்பு! ரிங்குவின் அதிரடி வேட்டை தொடருமா?

Tap to resize

Latest Videos

கொல்கத்தா நைட் ரைடர்ஸ்:

ரஹ்மானுல்லா குர்பாஸ் (விக்கெட் கீப்பர்), என் ஜெகதீசன்,  நிதிஷ் ராணா (கேப்டன்), ஆண்ட்ரூ ரஸல், ரிங்கு சிங், ஷர்துல் தாக்கூர், சுனில் நரைன், லாக்கி ஃப்ர்குசன், உமேஷ் யாதவ், வருண் சக்கரவர்த்தி, சுயாஷ் ஷர்மா.

சன்ரைசர்ஸ் ஹைதராபாத்:

மாயங்க் அகர்வால், ஹாரி ப்ரூக், ராகுல் திரிபாதி, எய்டன் மார்க்ரம் (கேப்டன்), ஹென்ரிச் க்ளாசென் (விக்கெட் கீப்பர்), அப்துல் சமாத், அபிஷேக் சர்மா, மாயங்க் மார்கண்டே, மார்கோ ஜான்சன், புவனேஷ்வர் குமார், உம்ரான் மாலிக்.

IPL 2023: ஒரு கேப்டனாக நீங்கள் அப்படி செய்திருக்க கூடாது; ஹர்திக் பாண்டியாவிற்கு ரூ.12 லட்சம் அபராதம்!

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியில் வாஷிங்டன் சுந்தருக்குப் பதிலாக அபிஷேக் சர்மா அணியில் இடம் பெற்றுள்ளார். இதுவரையில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிராக நடந்த போட்டிகளில் 15ல் வெற்றியும், 8ல் தோல்வியும் அடைந்துள்ளது. அதுமட்டுமின்றி கொல்கத்தா மைதானத்தில் நடந்த போட்டிகளில் ஹைதராபாத்திற்கு எதிரான 6ல் வெற்றியும், 2ல் தோல்வியும் அடைந்துள்ளது. இதுவே சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி கடந்த 2020 ஆம் ஆண்டு முதல் தற்போது வரையில் கொல்கத்தாவிற்கு எதிராக கொல்கத்தா மைதானத்தில் ஒரேயொரு போட்டியில் மட்டுமே வெற்றி கண்டுள்ளது.

 

🚨 Toss Update 🚨 win the toss and elect to field first against .

Follow the match ▶️ https://t.co/odv5HZvk4p | pic.twitter.com/77S1a7knB9

— IndianPremierLeague (@IPL)

 

click me!