பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் கொல்கத்தா அணி வெற்றி பெற்று புள்ளிப்பட்டியலில் 5ஆவது இடத்திற்கு முன்னேறியது.
ஐபிஎல் 2023 கிரிக்கெட் திருவிழா விறுவிறுப்பாக நடந்து வருகிறது. நேற்று பஞ்சாப் கிங்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகளுக்கு இடையிலான 53ஆவது போட்டி நேற்று நடந்தது. இதில், முதலில் ஆடிய பஞ்சாப் கிங்ஸ் அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 179 ரன்கள் குவித்தது. பின்னர், ஆடிய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் கடைசி ஓவரின் கடைசி பந்தில் த்ரில் வெற்றி பெற்றது. அதோடு புள்ளிப்பட்டியலில் 8ஆவது இடத்திலிருந்து 5ஆவது இடத்திற்கு முன்னேறியது.
யாருக்கெல்லாம் பிளே ஆஃப் வாய்ப்பு? யாரெல்லாம் அடுத்தடுத்த போட்டிகளில் ஜெயிக்க வேண்டும்?
தற்போது வரையில் 11 போட்டிகளில் விளையாடியுள்ள கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 5 போட்டிகளில் வெற்றி பெற்று 10 புள்ளிகளுடன் 5ஆவது இடத்தில் உள்ளது. ஆனால், இன்று நடக்கும் போட்டியில் மும்பை மற்றும் பெங்களூரு அணிகள் மோதுகின்றன. இதில், வெற்றி பெறும் அணி 3ஆவது இடத்திற்கு முன்னேறும். இதன் மூலமாக கொல்கத்தா 6ஆவது இடத்திற்கு தள்ளப்படும்.
மும்பைக்கு வீணான ரூ.8 கோடி: ஜோஃப்ரா ஆர்ச்சர் விலகல்! 5 மேட்சுல 2 விக்கெட் தான்!
நாளை நடக்கும் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகள் மோதுகின்றன. இதில் டெல்லி கேபிடல்ஸ் வெற்றி பெற்றால் 8ஆவது இடத்திற்கு முன்னேறும். இதைத் தொடர்ந்து கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு இடையிலான ஐபிஎல் தொடரின் 56ஆவது போட்டி வரும் 11 ஆம் தேதி கொல்கத்தாவில் நடக்கிறது. இதில், ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வெற்றி பெற்றால், 4ஆவது இடத்திற்கு செல்லும். இல்லையென்றால், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 4ஆவது இடத்திற்கு முன்னேறும்.
இந்தப் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி தோற்றால் கேகேஆரின் பிளே ஆஃப் சுற்று கனவாகவே போய்விடும்.
மே 11 - ராஜஸ்தான் ராயல்ஸ்
மே 14 - சென்னை சூப்பர் கிங்ஸ்
மே 20 - லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ்
3ஆவது இடத்திற்கான போட்டியில் மும்பை - பெங்களூரு பலப்பரீட்சை; யாரெல்லாம் இருக்காங்க தெரியுமா?