IPL 2021 #CSKvsKKR திரிபாதி, ராணா, தினேஷ் கார்த்திக் அதிரடி.. சிஎஸ்கேவிற்கு சவாலான இலக்கை நிர்ணயித்த கேகேஆர்

Published : Sep 26, 2021, 05:35 PM IST
IPL 2021 #CSKvsKKR திரிபாதி, ராணா, தினேஷ் கார்த்திக் அதிரடி.. சிஎஸ்கேவிற்கு சவாலான இலக்கை நிர்ணயித்த கேகேஆர்

சுருக்கம்

ராகுல் திரிபாதி, நிதிஷ் ராணா, தினேஷ் கார்த்திக் ஆகிய மூவரின் அதிரடியான பேட்டிங்கால் 20 ஓவரில் 171 ரன்கள் அடித்த கேகேஆர் அணி, 172 ரன்கள் என்ற சவாலான இலக்கை சிஎஸ்கேவுக்கு நிர்ணயித்துள்ளது.  

ஐபிஎல் 14வது சீசனில் இன்று அபுதாபியில் நடந்துவரும் போட்டியில் சிஎஸ்கேவும் கேகேஆரும் ஆடிவருகின்றன. டாஸ் வென்ற கேகேஆர் அணி முதலில் பேட்டிங் ஆடியது.

அதிரடியாக தொடங்கி, முதல் ஓவரிலேயே 2 பவுண்டரிகளை விளாசிய ஷுப்மன் கில், முதல் ஒவரின் கடைசி பந்தில் ரன் அவுட்டானார். மற்றொரு தொடக்க வீரரான வெங்கடேஷ் ஐயரை 18 ரன்னில் ஷர்துல் தாகூர் வீழ்த்தினார்.

அதிரடியாக ஆடி 4 பவுண்டரி மற்றும் ஒரு சிக்ஸருடன் 33 பந்தில் 45 ரன்கள் அடித்த ராகுல் திரிபாதி ஜடேஜாவின் சுழலில் வீழ்ந்தார். ஆண்ட்ரே ரசல் 15 பந்தில் 20 ரன் அடித்து ஆட்டமிழந்தார். நிதிஷ் ராணா கடைசிவரை ஆட்டமிழக்காமல் 27 பந்தில் 37 ரன் அடித்து கேகேஆர் அணியின் ஸ்கோரை உயர்த்தினார்.

தனது ஃபினிஷிங் ரோலை செவ்வனே செய்தார் தினேஷ் கார்த்திக். 11 பந்தில் 3 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸருடன் 26 ரன்கள் விளாசினார் தினேஷ் கார்த்திக். இதையடுத்து 20 ஓவரில் 171 ரன்களை குவித்த கேகேஆர் அணி, 172 ரன்கள் என்ற சவாலான இலக்கை சிஎஸ்கேவிற்கு நிர்ணயித்துள்ளது.
 

PREV
click me!

Recommended Stories

T20 World Cup 2026: வங்கதேச அணி இந்தியா வருவதை தடுத்தது பாகிஸ்தான்.. பிசிசிஐ பகீர் குற்றச்சாட்டு!
டி20 உலகக் கோப்பைக்கு கடப்பாரை டீமை களமிறக்கிய வெஸ்ட் இண்டீஸ்.. சிக்சர் மழைக்கு ரெடியா?