IPL 2021 #CSKvsKKR டாஸ் ரிப்போர்ட்.. சிஎஸ்கே அணியில் ஒரேயொரு மாற்றம்..!

Published : Sep 26, 2021, 03:22 PM IST
IPL 2021 #CSKvsKKR டாஸ் ரிப்போர்ட்.. சிஎஸ்கே அணியில் ஒரேயொரு மாற்றம்..!

சுருக்கம்

சிஎஸ்கே அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற கேகேஆர் அணி பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது.  

ஐபிஎல் 14வது சீசனில் அபுதாபியில் நடக்கும் இன்றைய போட்டியில் சிஎஸ்கேவும் கேகேஆரும் மோதுகின்றன. அமீரகத்தில் நடக்கும் 2வது பாகத்தில் இந்த 2 அணிகளுமே ஆடிய 2 போட்டிகளிலும் அபார வெற்றி பெற்ற நிலையில், இன்றைய போட்டியில் இந்த 2 அணிகளும் மோதுவதால் போட்டி பயங்கர விறுவிறுப்பாக இருக்கும்.

இந்த போட்டியில் டாஸ் வென்ற கேகேஆர் அணி கேப்டன் ஒயின் மோர்கன் பேட்டிங்கை தேர்வு செய்தார். பேட்டிங், பவுலிங் என இரண்டிலுமே வலுவாக திகழும் கேகேஆர் அணிக்கு இலக்கை விரட்டுவது, இலக்கை அடிக்கவிடாமல் கட்டுப்படுத்துவது இரண்டுமே சாத்தியமானதுதான். இந்த பாகத்தின் முதல் 2 போட்டிகளிலும் இலக்கை விரட்டிய நிலையில், இந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆட தீர்மானித்துள்ளது.

கேகேஆர் அணியில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. கடந்த போட்டிகளில் ஆடிய அதே ஆடும் லெவன் காம்பினேஷனுடன் தான் களமிறங்கியுள்ளது.

கேகேஆர் அணி:

ஷுப்மன் கில், வெங்கடேஷ் ஐயர், ராகுல் திரிபாதி, நிதிஷ் ராணா, ஒயின் மோர்கன்(கேப்டன்), தினேஷ் கார்த்திக்(விக்கெட் கீப்பர்), ஆண்ட்ரே ரசல், சுனில் நரைன், வருண் சக்கரவர்த்தி, லாக்கி ஃபெர்குசன், பிரசித் கிருஷ்ணா.

சிஎஸ்கே அணியில் சீனியர் வீரர் ட்வைன் பிராவோ ஆடவில்லை. கரீபியன் பிரீமியர் லீக்கில் ஆடியபோதே அவருக்கு ஃபிட்னெஸில் சிறிய பிரச்னை இருந்ததால், அது பெரிதாகிவிடக்கூடாது என்பதால் முன்னெச்சரிக்கையாக அவருக்கு ஓய்வளிக்கப்பட்டு அவருக்கு பதிலாக சாம் கரன் ஆடுகிறார்.

சிஎஸ்கே அணி:

ருதுராஜ் கெய்க்வாட், ஃபாஃப் டுப்ளெசிஸ், மொயின் அலி, ராயுடு, ரெய்னா, தோனி(கேப்டன், விக்கெட் கீப்பர்), ஜடேஜா, சாம் கரன், ஷர்துல் தாகூர், தீபக் சாஹர், ஜோஷ் ஹேசில்வுட்.
 

PREV
click me!

Recommended Stories

IND vs WI: 250 ரன் அடிச்சும் தோத்துட்டோமே.. இந்திய பவுலிங் கோச்சை விளாசித் தள்ளிய ஜாம்பவான்!
Harmanpreet Kaur Net Worth: கோடிகளை குவித்த ஹர்மன்ப்ரீத் கவுர்! மொத்த சொத்து மதிப்பு எவ்வளவு?