IPL 2021 சிஎஸ்கேவுக்கு எதிரான போட்டியில் களமிறங்கும் உத்தேச கேகேஆர் அணி

Published : Sep 25, 2021, 10:11 PM IST
IPL 2021 சிஎஸ்கேவுக்கு எதிரான போட்டியில் களமிறங்கும் உத்தேச கேகேஆர் அணி

சுருக்கம்

சிஎஸ்கேவுக்கு எதிரான போட்டியில் களமிறங்கும் கேகேஆர் அணியின் உத்தேச ஆடும் லெவனை பார்ப்போம்.  

ஐபிஎல் 14வது சீசனின் 2வது பாகம் ஐக்கிய அரபு அமீரகத்தில் விறுவிறுப்பாக நடந்துவருகிறது. நாளை ஞாயிற்றுக்கிழமை 2 போட்டிகள் நடக்கவுள்ளன. பிற்பகல் 3.30 மணிக்கு தொடங்கும் போட்டியில் சிஎஸ்கேவும் கேகேஆரும் மோதுகின்றன. அபுதாபியில் நடக்கிறது இந்த போட்டி.

அமீரகத்தில் நடக்கும் நடப்பு சீசனின் 2ம் பாகத்தில் ஆடிய 2 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ள சிஎஸ்கேவும் கேகேஆரும் நாளை மோதுகின்றன. சமபலம் வாய்ந்த, சிறப்பாக ஆடிவரும் இந்த 2 அணிகளும் நாளை மோதுவதால் இந்த போட்டி மீது  அதிக எதிர்பார்ப்பு நிலவுகிறது.

புள்ளி பட்டியலில் 2ம் இடத்தில் உள்ள சிஎஸ்கேவும், 4ம் இடத்தில் உள்ள கேகேஆரும் மோதுவதால், அந்த போட்டியின் முடிவு புள்ளி பட்டியலில் தாக்கத்தை ஏற்படுத்தும். எனவே 2 அணிகளுமே வெற்றி முனைப்பில் களமிறங்கும் நிலையில், சிஎஸ்கே அணியின் உத்தேச ஆடும் லெவனை பார்ப்போம்.

கேகேஆர் அணியில் எந்த மாற்றமும் செய்யப்பட வாய்ப்பில்லை. கடந்த 2 போட்டிகளில் ஆடிய அதே வின்னிங் காம்பினேஷனுடன் தான் கேகேஆர் களமிறங்கும். ஏனெனில் அணி காம்பினேஷனில் மாற்றம் செய்வதற்கான அவசியமே இல்லை.

உத்தேச கேகேஆர் அணி:

வெங்கடேஷ் ஐயர், ஷுப்மன் கில், ராகுல் திரிபாதி, நிதிஷ் ராணா, மோர்கன்(கேப்டன்), தினேஷ் கார்த்திக்(விக்கெட் கீப்பர்), ஆண்ட்ரே ரசல், சுனில் நரைன், லாக்கி ஃபெர்குசன், வருண் சக்கரவர்த்தி, பிரசித் கிருஷ்ணா.
 

PREV
click me!

Recommended Stories

ஐபிஎல் மினி ஏலம்.. 1005 வீரர்களை தூக்கி எறிந்த BCCI.. 350 வீரர்களுடன் லிஸ்ட் ரெடி
தென்னாப்பிரிக்கா டி20 தொடரில் ஹர்திக் பாண்ட்யா படைக்க போகும் 'மெகா' இரட்டை சாதனை!