IPL 2021 கேகேஆருக்கு எதிரான போட்டியில் களமிறங்கும் உத்தேச சிஎஸ்கே அணி

Published : Sep 25, 2021, 10:09 PM IST
IPL 2021 கேகேஆருக்கு எதிரான போட்டியில் களமிறங்கும் உத்தேச சிஎஸ்கே அணி

சுருக்கம்

கேகேஆருக்கு எதிரான போட்டியில் களமிறங்கும் சிஎஸ்கே அணியின் உத்தேச ஆடும் லெவனை பார்ப்போம்.  

ஐபிஎல் 14வது சீசனின் 2வது பாகம் ஐக்கிய அரபு அமீரகத்தில் விறுவிறுப்பாக நடந்துவருகிறது. நாளை ஞாயிற்றுக்கிழமை 2 போட்டிகள் நடக்கவுள்ளன. பிற்பகல் 3.30 மணிக்கு தொடங்கும் போட்டியில் சிஎஸ்கேவும் கேகேஆரும் மோதுகின்றன. அபுதாபியில் நடக்கிறது இந்த போட்டி.

அமீரகத்தில் நடக்கும் நடப்பு சீசனின் 2ம் பாகத்தில் ஆடிய 2 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ள சிஎஸ்கேவும் கேகேஆரும் நாளை மோதுகின்றன. சமபலம் வாய்ந்த, சிறப்பாக ஆடிவரும் இந்த 2 அணிகளும் நாளை மோதுவதால் இந்த போட்டி மீது  அதிக எதிர்பார்ப்பு நிலவுகிறது.

புள்ளி பட்டியலில் 2ம் இடத்தில் உள்ள சிஎஸ்கேவும், 4ம் இடத்தில் உள்ள கேகேஆரும் மோதுவதால், அந்த போட்டியின் முடிவு புள்ளி பட்டியலில் தாக்கத்தை ஏற்படுத்தும். எனவே 2 அணிகளுமே வெற்றி முனைப்பில் களமிறங்கும் நிலையில், சிஎஸ்கே அணியின் உத்தேச ஆடும் லெவனை பார்ப்போம்.

சிஎஸ்கே அணியில் எந்த மாற்றமும் செய்யப்பட வாய்ப்பில்லை. கடந்த 2 போட்டிகளில் ஆடிய அதே வின்னிங் காம்பினேஷனுடன் தான் சிஎஸ்கே களமிறங்கும்.

உத்தேச சிஎஸ்கே அணி:

ருதுராஜ் கெய்க்வாட், டுப்ளெசிஸ், மொயின் அலி, ரெய்னா, ராயுடு, தோனி(கேப்டன், விக்கெட் கீப்பர்), ஜடேஜா, பிராவோ, ஷர்துல் தாகூர், தீபக் சாஹர், ஜோஷ் ஹேசில்வுட்.
 

PREV
click me!

Recommended Stories

IND vs WI: 250 ரன் அடிச்சும் தோத்துட்டோமே.. இந்திய பவுலிங் கோச்சை விளாசித் தள்ளிய ஜாம்பவான்!
Harmanpreet Kaur Net Worth: கோடிகளை குவித்த ஹர்மன்ப்ரீத் கவுர்! மொத்த சொத்து மதிப்பு எவ்வளவு?